நேஷனல் ஹெரால்டு வழக்கு.. சோனியாவிடம் 6 மணி நேரம் விசாரணை.. நாளை மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முன் நாளை மீண்டும் ஆஜராக சோனியா காந்திக்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு காரணமாக சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜராவது தாமதமானது. இதனிடையே ராகுல் காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.

பின்னர் கொரோனா பாதிப்பில் இருந்து சோனியா காந்தி மீண்டதை தொடர்ந்து அவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனை தொடர்ந்து கடந்த ஜுலை 21 ஆம் தேதி சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். அப்போதும் நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் கையில் எடுத்தது. இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட விசாரணைக்காக சோனியா காந்தி ஆஜராகினார். அப்போது மகளும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியுடன் அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் இருந்தார்.
இதனைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் டெல்லியில் அமலாக்கத்துறையையும் மத்திய அரசையும் கண்டித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திலிருந்து பேரணியாக வந்து விஜய் சவுக் பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து போலீசார் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பிக்களை கைது செய்து அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா காந்தியிடம் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. காலையில் ஆஜரான சோனியா காந்தியிடம் மதியம் 2 மணி வரை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் உணவு இடைவேளை விட்டு, மீண்டும் மூன்று மணியளவில் ஆஜரானார். பின்னர் தொடர்ந்து 4 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் நாள் விசாரணையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், நாளை சோனியா காந்தி மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications