தாமரை, இலை.. சண்முகத்துக்கு வந்த சிக்கல்.. தமிழ்நாட்டில் 7 கட்சிகள் நீக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி!
டெல்லி : புதிய நீதிக்கட்சி உள்பட தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 7 கட்சிகளின் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
2014 முதல் 2019 வரை தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி 86 கட்சிகள் அங்கீகாரத்தை இழந்துள்ளன.
கொங்குநாடு ஜனநாயக கட்சி, மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி, தேசபக்தி, புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காயிதே மில்லத் கழகம், தமிழர் கழகம் ஆகிய கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய விதிமுறைகள்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி பதிவு செய்யும் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறவேண்டுமென்றால் மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்தோ, கூட்டணியாகவோ குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

6 ஆண்டுகள் போட்டியிடாவிட்டால்
6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் செயல்படாதவை. அதேபோல 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக தேர்தலில் நிற்கவில்லை என்றால் அவை பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

86 கட்சிகளின் பதிவு ரத்து
அதன்படி, 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் இருந்த 86 கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களைச் சார்ந்த பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 86 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம். 2014-ல் இருந்து 2019 வரையான காலத்தில் சட்டமன்ற தேர்தலிலோ நாடாளுமன்ற தேர்தலிலோ போட்டியிடாததால் கட்சி பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி நடவடிக்கை
இதுவரை பதிவு செய்யப்பட்டு, அங்கீகாரம் பெறாத 253 கட்சிகளையும் செயல்படாத கட்சிகள் எனக் குறிப்பிட்டு பட்டியலை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். செயல்படாத கட்சிகள் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய டி.ராஜேந்தரின் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 22 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் 7 கட்சிகள்
தமிழ்நாட்டில் இருந்து கொங்குநாடு ஜனநாயக கட்சி, மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி, தேசபக்தி, புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காயிதே மில்லத் கழகம், தமிழர் கழகம் ஆகிய 7 கட்சிகளின் அங்கீகாரம் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏசி சண்முகம்
அதிமுக சார்பில் எம்.பியாகவும், எம்.எல்.ஏவாகவும் இருந்த ஏ.சி.சண்முகம் பின்னர் புதிய நீதிக்கட்சியை தொடங்கினார். புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவரான ஏ.சி.சண்முகம் சமீபத்திய தேர்தல்களில், பாஜக, அதிமுக சின்னங்களில் போட்டியிட்டார். இதனால், அவரது கட்சி கடந்த 6 ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால், அக்கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications