வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்- எதிர்ப்புக்கு இடையே தேர்தல் சீருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்!
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் மிக கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வகை செய்கிறது இந்த தேர்தல் சீர்திருத்த மசோதா.
தலைமை தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்தல் சீர் திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.

லோக்சபாவில் கடும் எதிர்ப்பு
இதனைத் தொடர்ந்து இன்று லோக்சபாவில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ இம்மசோதாவை தாக்கல் செய்தார். ஆனால் இந்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் மிக கடுமையாக எதிர்த்தனர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பது அதாவது வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் எண்ணையும் இணைக்க இந்த மசோதா வகை செய்கிறது. ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. அதனால் லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர்.

ஆதார் சட்டம் சொல்வது என்ன?
லோக்சபாவில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க ஆதார் சட்டம் அனுமதிக்கவில்லை. ஆகையால் மத்திய அரசு இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதேபோல் ஓவைசி, சசிதரூர் உள்ளிட்ட எம்.பிக்களும் இம்மசோதாவை எதிர்த்து குரல் கொடுத்தனர். சசி தரூர் பேசுகையில், ஆதார் எண் என்பது இருப்பிடத்துக்கான ஆதாரம்; அது குடியுரிமை ஆவணம் அல்ல. இந்த மசோதா இந்திய குடியுரிமை இல்லாதவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையைத் தரக் கூடியது என்றார்.

லோக்சபாவில் நிறைவேற்றம்
இதனால் லோக்சபாவில் அமளி நிலவியது. இதையடுத்து லோக்சபா நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் சபை கூடிய போது, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications