ஒரு தனிநபர் மற்றொரு தனிநபருக்கு பழைய வாகனங்களை விற்றால் ஜிஎஸ்டி வரியா? மத்திய அரசு விளக்கம்
டெல்லி: பழைய, பயன்படுத்திய வாகனங்களின் விற்பனையில் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியவர்கள் யார்? ஒரு தனிநபர் மற்றொரு தனிநபருக்கு பழைய, பயன்படுத்திய காரை விற்றால் ஜிஎஸ்டி பொருந்துமா? பழைய, பயன்படுத்திய வாகனத்தின் விற்பனை மதிப்பில் ஜிஎஸ்டி விதிக்கப்படுமா? என்பது உள்ளிட்ட சந்தேகங்களுக்கு மத்திய அரசு விரிவான விளக்கம் தந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது:
1. மின்சார வாகனங்கள் தவிர பழைய, பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனை குறித்து 55-வது சரக்கு - சேவை வரிக் (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகள் என்ன?
பதில்: வரிமுறையை எளிமைப்படுத்தும் நடவடிக்கையாக, மின்சார வாகனங்கள் உட்பட அனைத்து பழைய, பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனைக்கும் ஒரே மாதிரியாக 18 சதவீத சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) வரி விதிக்க கவுன்சில் பரிந்துரைத்தது. முன்பு வேறு வேறு விகிதங்களில் வரி இருந்தது. ஜிஎஸ்டி கவுன்சில் இதற்குப் புதிய வரி விதிக்கப் பரிந்துரைக்கவில்லை.
2. பழைய, பயன்படுத்திய வாகனங்களின் விற்பனையில் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியவர்கள் யார்?
பதில்: பழைய, பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்குவது, விற்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்கள் போன்ற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியவர்கள்.
3. ஒரு தனிநபர் மற்றொரு தனிநபருக்கு பழைய, பயன்படுத்திய காரை விற்றால் ஜிஎஸ்டி பொருந்துமா?
பதில்: இல்லை. இந்த விஷயத்தில் ஜிஎஸ்டி பொருந்தாது.
4. பழைய, பயன்படுத்திய வாகனத்தின் விற்பனை மதிப்பில் ஜிஎஸ்டி விதிக்கப்படுமா?
பதில்: பதிவு செய்த நபர் வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 32-ன் கீழ் தேய்மானம் கோரினால், விற்பவரின் லாப விகித மதிப்பின் அடிப்படையில் மட்டுமே ஜிஎஸ்டி செலுத்தப்பட வேண்டும். அதாவது, விற்கும் தேதியில் வாகனத்தின் விற்பனைக்கான விலைக்கும் தேய்மான மதிப்புக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். அத்தகைய விகிதம் எதிர்மறையாக இருந்தால், ஜிஎஸ்டி பொருந்தாது. ஜிஎஸ்டி செலுத்தத் தேவை இல்லை. மற்ற எந்த சந்தர்ப்பத்திலும், ஜிஎஸ்டி, விற்பவரின் லாப மதிப்பில் மட்டுமே செலுத்தப்படும். அதாவது தேய்மானத்துக்குப் பிந்தைய விற்பனை விலைக்கும் வாங்குபவர் வாங்கும் விலைக்கும் இடையிலான வேறுபாட்டுக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அத்தகைய விகிதம் எதிர்மறையாக இருந்தால், ஜிஎஸ்டி பொருந்தாது.
எடுத்துக்காட்டு 1:
ஒரு பதிவு செய்யப்பட்ட நபர் பழைய, பயன்படுத்திய வாகனத்தை மற்றொரு நபருக்கு ரூ.10 லட்சத்திற்கு விற்கிறார். வாகனம் புதிதாக வாங்கப்பட்ட விலை ரூ .20 லட்சமாக இருந்தது என வைத்துக் கொள்வோம். வருமான வரிச் சட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம் தேய்மானம் கோரி இருக்கிறார் என வைத்துக் கொள்ளலாம். அப்படி இருந்தால் அவர் எந்த ஜிஎஸ்டி-யையும் செலுத்த தேவையில்லை. அதாவது இங்கு பழைய வாகன விற்பனை விலையின் வித்தியாச மதிப்பு என்பது ரூ. 10 லட்சமாக உள்ளது. தேய்மானத்துக்குப் பின் அதன் மதிப்பு ரூ. 12 லட்சம். அதாவது ரூ.20 லட்சம் - ரூ.8 லட்சம் = ரூ. 12 லட்சம். ஆனால் அவர் வாகனத்தை ரூ. 10 லட்சத்துக்கே விற்கிறார். இது எதிர்மறையானது. லாபம் இல்லாதது. தேய்மானத்துக்குப் பிந்தைய மதிப்பை விட விற்கும் விலை குறைவாக இருக்கிறது. எனவே ஜிஎஸ்டி செலுத்தத் தேவை இல்லை. மேலே உள்ள எடுத்துக்காட்டில் தேய்மானத்துக்குப் பின் மதிப்பு ரூ.12 லட்சமாகவும், பழைய வாகன விற்பனை விலை ரூ.15 லட்சமாகவும் இருந்தால், அப்போது விற்பவர் லாபத்தில் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அதாவது ரூ.3 லட்சத்துக்கு 18% சரக்கு - சேவை வரி செலுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு 2:
ஒரு நபர் தமது பழைய, பயன்படுத்திய வாகனத்தை மற்றொரு நபருக்கு ரூ. 10 லட்சத்திற்கு விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் அந்த வாகனத்தை வாங்கியபோது அதன் விலை ரூ. 12 லட்சமாக இருந்தது என வைத்துக் கொள்வோம். அப்படி இருந்தால் அவர் எந்த ஜிஎஸ்டி-யையும் செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் விற்பவரின் லாபம் இங்கு எதிர்மறையாக உள்ளது. வாகனத்தின் கொள்முதல் விலை ரூ. 20 லட்சம் மற்றும் விற்பனை விலை ரூ. 22 லட்சம் என்றால், விற்பவரின் லாபத் தொகைக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அதாவது லாபத் தொகையான ரூ. 2 லட்சத்துக்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications