மோடிக்கு உண்மையிலேயே விவசாயிகள் மீது பாசம் இருக்கிறதா..இன்று தெரியும்.. பிரியங்கா காந்தி வைத்த செக்
டெல்லி: சர்ச்சைக்குரிய 3 விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த மறுநாளான இன்று, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சீனியர் தலைவர் பிரியங்கா காந்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், விவசாயிகளின் நலன்களைக் உண்மையிலேயே மோடி மதித்தால், டிஜிபி மாநாட்டின் போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுடன் பங்கேற்க கூடாது என்று கோரியுள்ளார்.
லக்கிம்பூர் விவசாயி படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு பிரியங்கா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், மரணமடைந்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் பிரியங்கா கோரினார். டிஜிபி (காவல்துறை இயக்குநர்கள்) ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி லக்னோ வந்துள்ளார். இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பங்கேற்கிறார். இதனிடையே, சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பிரியங்கா கூறுகையில், "பிரதமர் லக்னோ வந்துள்ளார். உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், அவர் கலந்து கொள்ள உள்ளார். இதில் மோடி பங்கேற்க கூடாது என கடிதம் எழுதியுள்ளேன். அந்த கடிதத்தை உங்கள் மூலம் நாட்டிற்கும் மாநிலத்திற்கும் முன் வைக்க விரும்புகிறேன்." என்று தெரிவித்து கடிதத்தை காட்டினார்.

மோடிக்கு கடிதம்
அந்த கடிதத்தில் பிரியங்கா கூறுகையில், 'லக்கிம்பூர் விவசாயி படுகொலையில் நடந்த கொடுமையை நாடு முழுவதும் பார்த்துள்ளது. விவசாயிகளை காரால் நசுக்கிய முக்கிய குற்றவாளி உங்கள் அரசில் உள்ள மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகன் என்பதும் உங்களுக்குத் தெரியும். அரசியல் அழுத்தம் காரணமாக, இந்த வழக்கில் நீதியின் குரலை ஆரம்பத்திலிருந்தே நசுக்க முயற்சித்தது உத்தரப் பிரதேச அரசு. குறிப்பிட்ட ஒரு குற்றவாளியைக் காப்பாற்ற அரசு முயற்சிப்பதாகத் தெரிகிறது.

அஜய் மிஸ்ரா அமைச்சர்
லக்கிம்பூர் விவசாயிகளின் குடும்பத்தினரை நான் சந்தித்துள்ளேன். தாங்க முடியாத வேதனையில் உள்ளனர். அனைத்து குடும்பங்களும் நீதி வேண்டும் என்றும், மத்திய உள்துறை இணை அமைச்சராக அஜஸ் மிஸ்ரா நீடிக்கும்போது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் கூறுகின்றனர். லக்கிம்பூர் விவசாயி படுகொலை வழக்கு விசாரணையின் சமீபத்திய நிலை அந்த குடும்பங்களின் அச்சத்தை நியாயப்படுத்துகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பொறுப்பானவர்கள். நாட்டின் பிரதமர் நீங்கள். நாட்டின் விவசாயிகள் மீதான உங்கள் பொறுப்பை நீங்கள் நன்றாக புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் நீதியை உறுதி செய்வது பிரதமரின் கடமை மட்டுமல்ல, அது அவரது தார்மீகப் பொறுப்பு.

நீதியை நிலை நாட்டுங்கள்
நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நேர்மையான இதயத்துடனும், தூய உள்ளத்துடனும் விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். நாட்டின் விவசாயிகள் மீது உங்களுக்கு நல்ல மதிப்பு இருப்பதாகவும் கூறினீர்கள். இது உண்மையாக இருந்தால், லக்கிம்பூர் விவசாயி படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதும் உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்க வேண்டும்.

கொலையாளிகளை காப்பாற்றுகிறார்கள்
ஆனால், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தேனி இன்னும் உங்கள் அமைச்சரவையில் தொடர்ந்து பதவி வகித்து வருகிறார். இந்த கூட்டத்தில், மிஸ்ராவுடன் நீங்கள் மேடையைப் பகிர்ந்து கொண்டால், கொலையாளிகளைக் காப்பவர்களுடன் நீங்கள் நிற்கிறீர்கள் என்ற தெளிவான செய்தி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனுப்பப்படும். இது விவசாயிகளின் சத்தியாகிரகத்தில் வீரமரணம் அடைந்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளை அவமதிக்கும் செயலாகும்.

நிதி வழங்குங்கள்
விவசாயிகள் மீதான உங்கள் எண்ணம் உண்மையில் தெளிவாக இருந்தால், இன்று மத்திய உள்துறை இணை அமைச்சருடன் மேடையைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. நாடு முழுவதும் விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று, தியாகம் செய்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் நிதி வழங்குங்கள். இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video

லக்கிம்புர் கேரி
அக்டோபர் 3ம் தேதி உத்திரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவின் கான்வாய் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில் சென்றபோது மத்திய அரசின் மூன்று புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக பேரணி சென்ற நான்கு விவசாயிகள் SUV வாகனத்தால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், உள்துறை இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் உள்பட பலர் மீது இந்திய தண்டனைச் சட்டம், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications