Replacing old political vehicle.. சாரி சாரி! நிர்மலா சீதாராமனின் டங் ஸ்லிப் ஆனதால் அவையில் சிரிப்பலை
நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாய் தவறி கூறிய வார்த்தையால் அவையில் சிரிப்பலை
டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து அந்த உரையை வாசித்துக் கொண்டிருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொல்யூட்டிிங் என்பதற்கு பதிலாக பொலிட்டிகல் என கூறியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் தனது 87 நிமிட உரையை வாசிக்கத் தொடங்கினார். இந்த பட்ஜெட் பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் இதில் எதிர்பார்ப்புகள் எழுந்தன.
இந்த பட்ஜெட்டில் தூய்மை இந்தியா திட்டம், உஜ்வாலா திட்டம், ஜன்தன் திட்டம் உள்ளிட்டவை குறித்து நிதியமைச்சர் பட்டியலிட்டு பேசினார். அப்போது மக்கள் எதிர்பார்த்தது போல் முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டிருந்தார்.

7 லட்சம் வருமானம்
புதிய வருமான வரி முறையில் இருப்போருக்கு ஆண்டு மொத்த வருமானம் ரூ 7 லட்சம் இருந்தால் வரி கிடையாது என அறிவித்தார். இந்த வரி உச்ச வரம்பை அதிகரித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்டது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து கடந்த ஆண்டே இந்த உச்ச வரம்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த நிதியாண்டில்தான் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காற்று மாசு
காலாவதியான மாசை ஏற்படுத்தும் பழைய வாகனங்கள் அகற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என நிர்மலா தெரிவித்தார். இது குறித்த உரையை நிர்மலா சீதாராமன் பேச தொடங்கினார். அப்போது அவர் கூறுகையில் பழைய வாகனங்களை மாற்றும் திட்டம் இந்தியாவின் முக்கியமான கொள்கையாகும் என கூறிய அவர் replacing old political.. vehicle என வாய் தவறி கூறினார்.
|
வயிறு வலிக்க சிரிப்பு
அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது. நிர்மலாவின் இந்த கூற்றிற்கு எதிர்க்கட்சிகளும் சிரித்தனர். உடனே தவறை உணர்ந்த நிர்மலா சீதாராமனும் சிரித்துவிட்டு சாரி சாரி என கூறி, தான் பேசியதை சரி செய்தார். replacing old polluting vehicle இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு இருக்கிறது. இதன் மூலம் காற்று மாசு கட்டுப்படுத்தப்படும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என சரி செய்து பேசினார். இதையடுத்து சிரிப்பலை அடங்கியது.

பழைய வாகனங்களை அகற்றும் நடைமுறை
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பழைய வாகனங்களை அகற்றும் பணிகள் தொடங்குகின்றன. இந்த வாகனங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் அடங்கும். பட்ஜெட் வாசிக்கும் போது 1 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்பதால் உறுப்பினர்களுக்கு போர் அடித்து விடக் கூடாது என்பதற்காகவே பட்ஜெட் உரையை சிலர் சுவாரஸ்யமாகவும் காமெடியாகவும் படிப்பார்கள். அந்த வகையில் நிர்மலா சீதாராமன் வாய் தவறி கூறியது அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications