நரகம்போல் எரிந்த தீ... புகை மண்டலமான டெல்லி! தூங்காமல் விடியவிடிய போராடிய தீயணைப்பு வீரர்கள்
டெல்லி: பல்ஸ்வா குப்பை கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக தலைநகர் டெல்லியே புகை மண்டலமாக மாறியுள்ளது.
Recommended Video
டெல்லி வடக்கு பகுதியில் அமைந்துள்ள பல்ஸ்வாவில் இருக்கும் குப்பை கிடங்கில் நேற்று மாலை 5:47 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தொடர்புகொண்டு தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த தீயணைப்பு படையினர் 10 தீயணைப்பு வாகனங்களில் சம்பட இடத்துக்கு சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், குப்பை கிடங்கில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளும், தீ விரைவில் பரவக்கூடிய கழிவுகளும் அதிகளவில் இருந்ததால் தீ வேகமாக கிடங்கு முழுவதும் பரவியது.
இதனையடுத்து தீயணைப்பு பணியில் ஈடுபட மேலும் 3 வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மொத்தம் 13 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் தீயயை கட்டுப்படுத்தும் சவாலான பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ முழுமையாக அணையவில்லை. நள்ளிரவு வரை தீயை கட்டுப்படுத்தும் பணியில் வீரர்கள் முழு மூச்சாக ஈடுபட்டனர்.
குப்பை கிடங்கிற்கு அருகாமையிலேயே குடியிருப்புகள் இருந்ததால் அங்கு பரவவிடாமல் தடுக்க கடுமையாக போராடினர். விடிய விடிய நடைபெற்ற இந்த போராட்டத்தின் முடிவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பல்ஸ்வா உட்பட வடக்கு டெல்லி முழுவதும் புகைக்காடாக மாறி இருக்கிறது.
நேற்று மட்டும் இதேபோல் டெல்லியில் 3 இடங்களில் தீ விபத்துகள் பதிவாகி இருக்கின்றன. இந்த தீ விபத்தை தொடர்ந்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், மாசு கட்டுப்பாட்டு வாரியம் 24 மணி நேரத்திற்குள் காற்று மாசு குறித்தும் தீ விபத்தால் அதிகரித்துள்ள மாசு விபரம் குறித்தும் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Here’s why we are the worlds most polluted city. We don’t care. It shows in how little we compost. If we did, this massive landfill fire would not have happened. pic.twitter.com/IJmc4eg6fY
— Bharati Chaturvedi (@Bharati09) April 26, 2022












Click it and Unblock the Notifications