ஒரு பெண்ணுக்கே பாதுகாப்பில்லை! நுபுர் சர்மாவுக்கு திடீர் ஆதரவு.. வரிந்து கட்டி வந்த கவுதம் காம்பீர்!
டெல்லி : இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நும்பூர் சர்மாவுக்கு எதிர்ப்பு மற்றும் மிரட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில் அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜகவை சேர்ந்தவருமான கௌதம் காம்பீர் ஆதரவு அளித்துள்ளார்.
ஞானவாபி மசூதி தொடர்பாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்று பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு சர்மாவின் இந்த கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சவூதி அரேபியா, அபுதாபி, யேமன் போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள் இந்த விவகாரம் தொடர்பாக பிரச்சினையை எழுப்பியதை அடுத்து, நுபுர் சர்மா மற்றும் ஜிண்டால் ஆகியோர் பாஜக நடவடிக்கை எடுத்தது.

நுபுர் சர்மா விவகாரம்
மேலும், பாஜக செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், மற்றும் தொலைக்காட்சி செய்தி விவாதங்களில் பங்கேற்க அதிகாரம் பெற்ற சில மத்திய அமைச்சர்கள் பொது மேடைகளில் மதத்தைப் பற்றி பேசும்போது "மிகவும் எச்சரிக்கையாக" இருக்குமாறு பாஜக அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நுபுர் ஷர்மா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஒரு வாரத்திற்கும் மேலாக ஆகியுள்ள நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்துள்ளது.

வன்முறை வெடித்தது
உத்தரபிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வன்முறை மோதல்கள் வெடித்துள்ள நிலையில் நிலைமை மத்திய தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதுகுறித்து மாநில அரசுகள் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தனக்கு மிரட்டல்கள் வருவதாக நுபுர் சர்மா புகார் கூறிய நிலையில், பல வலதுசாரி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நுபுர் சர்மாவுக்கு ஆதரவு
இந்நிலையில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த கபில் மிஸ்ரா மற்றும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா உட்பட பல டெல்லி மற்றும் மாவட்ட அளவிலான பாஜக தலைவர்களைக் கொண்ட ஆதரவாளர்களின் வரிசையில் கவுதம் கம்பீர் சேர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரராக இருந்து பாஜகவில் சேர்ந்து அரசியல்வாதியாக மாறிய கவுதம் கம்பீர் ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவை பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நுபுர் சர்மாவுக்கு வழங்கியுள்ளார்.

கவுதம் காம்பீர் ட்விட்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் #LetsTolerateIntolerance என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்துள்ள காம்பீர், "மன்னிப்புக் கேட்ட ஒரு பெண்ணுக்கு எதிராக நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்களின் மோசமான காட்சியைக் கண்டு 'மதச்சார்பற்ற தாராளவாதிகள்' என்று அழைக்கப்படுபவர்களின் மௌனம் நிச்சயமாக காது கேளாதது!" என கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications