ஹைதராபாத்தில் அமைகிறது தடுப்பூசி பரிசோதனை மையம்.. பிரதமர் நிவாரண நிதியிலிருந்து பணம் ஒதுக்கீடு
டெல்லி: ஹைதராபாத்தில் தடுப்பூசி பரிசோதனை ஆய்வகம் அமைப்பதற்காக பிரதமர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

"ஹைதராபாத்தில் தடுப்பூசி பரிசோதனை ஆய்வகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியதற்கு மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடிக்கு நான் நன்றி கூறுகிறேன். ஹைதராபாத்தில் மருந்தியல் துறையின் விரிவான வளர்ச்சியை நோக்கி ஒரு பெரிய படியாகும், இது கொரோனா தடுப்பூசிகளின் உற்பத்தியையும் அதிகரிக்கும்" என்று கிஷன் ரெட்டி, ட்வீட் செய்துள்ளார்.
தடுப்பூசி உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த, நாட்டில் அதிக தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் தேவை என்று கிஷன் ரெட்டி மேலும் கூறியுள்ளார்.
கசவுலியில் உள்ள மத்திய மருந்து ஆய்வகம் மற்றும் நொய்டாவில் உள்ள தேசிய உயிரியல் நிறுவனம் ஆகிய இரண்டு தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் தற்போது நாட்டில் உள்ளன.
இதுபோன்ற இரண்டு ஆய்வகங்களை நிறுவுவதற்காக மார்ச் 6 ஆம் தேதி பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒன்று புனே, தேசிய உயிரியல் அறிவியல் மையத்தில் அமைய உள்ளது, மற்றொன்று ஹைதராபாத்தில் உள்ள தேசிய விலங்கு பயோடெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் அமைய உள்ளது.
இதில் ஹைதராபாத்தில் உள்ள ஆய்வக பணிகள், அடுத்த ஒரு மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications