விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! மத்திய அரசு மெகா முடிவு? சென்னை டூ அமெரிக்கா டிக்கெட் விலை குறையுமா
டெல்லி: ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. இதன் நேரடி விளைவாக சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை தங்களது விமானக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளன.. அந்த கட்டண விவரங்கள் என்னென்ன தெரியுமா??
சர்வதேச சந்தையில் நிலவும் போர்ச் சூழலால் விமான எரிபொருள் விலை சுமார் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.. குறிப்பாக டெல்லி மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் விதிக்கப்படும் அதிகப்படியான உற்பத்தி வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி காரணமாக விமான நிறுவனங்களுக்கு ஏற்கனவே கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது..

விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்
இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஏர் இந்தியா நிர்வாகம் தனது செய்திக்குறிப்பில் உருக்கமாக தெரிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு இன்று மார்ச் 12ம் தேதி முதல் 3 கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளது.. முதல் கட்டமாக இன்று அதிகாலை முதல் உள்நாட்டுப் பயணங்கள் மற்றும் சார்க் நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம் போன்ற நாடுகளுக்குச் செல்லும் விமானங்களுக்கு ரூ.399 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது..
சென்னை டூ அமெரிக்கா
மேற்கு ஆசிய நாடுகளுக்குச் செல்பவர்கள் சுமார் ரூ.920 வரையிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்பவர்கள் ரூ.1840 முதல் ரூ.5516 வரையிலும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆப்பிரிக்க நாடுகளுக்கான கட்டண உயர்வு அதிகபட்சமாக ரூ.8,278 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
இதுவரை சிங்கப்பூர் செல்லும் ஃபிளைட்களுக்கு எரிபொருள் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்த நிலையில், இனிமேல் அங்கேயும் இந்த வசூல் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. ஏர் இந்தியாவை தொடர்ந்து மற்ற தனியார் விமான நிறுவனங்களும் விலையேற்றத்தை அறிவிக்கத் தயாராகி வருவதால், வெளிநாடு செல்லும் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
விமான கட்டணம் உயர்வு
இருந்தாலும், இந்த சூழலில் ஒரு ஆறுதலான குட் நியூஸ் தகவலும் கசிந்துள்ளது.. சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது..
அதன்படி, ஃபிளைட் எரிபொருள் மீதான வரியை தற்காலிகமாக குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.. இந்த வரி குறைப்பு அமலுக்கு வந்தால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டணங்கள் மீண்டும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது..
மேலும், ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றம் குறைந்தால் அடுத்த சில வாரங்களில் கச்சா எண்ணெய் விலை சரிந்து, அதன் பலனாக ஃப்ளைட் டிக்கெட் விலையும் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கோடைக்கால விடுமுறை நெருங்குவதால், நடுத்தர வர்க்கப் பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்புச் சலுகைகளை வழங்கவும் விமான நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது.
மத்திய அரசு முடிவு
2ம் கட்ட கட்டண உயர்வு வரும் மார்ச் 18ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.. இதன்படி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு ரூ.2,300 வரையிலும், வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் விமானங்களுக்கு ரூ.4,594 முதல் ரூ.16,800 வரையிலும் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது..
3ம் கட்டமாக ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென்கொரியா நாடுகளுக்கான கட்டண உயர்வு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த உயர்வு தற்காலிகமானதுதான் என்றும், நிலைமை சீரானதும் கட்டணங்கள் குறைக்கப்படும் என்றும் விமான போக்குவரத்து துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன..
அதனால் பயணிகள் இப்போதைக்கு அவசரப்படத் தேவையில்லை என்றும், அரசின் அடுத்தகட்ட அறிவிப்புக்காக/ காத்திருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..!!!
-
இண்டிகோ, ஏர் இந்தியாவுக்கு ஷாக்.. ஒரே நாளில் விமான எரிபொருள் விலை டபுள் மடங்கு உயர்வு..!! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications