டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பக்கா பிளான்.. மே 23 அல்ல மே 21ம் தேதியே பிரதமரை தேர்வு செய்யும் எதிர்க்கட்சிகள்.. கலக்கத்தில் பாஜக

லோக்சபா தேர்தல் முடிவுகள் வருவதற்கு இரண்டு நாளுக்கு முன்பே எதிர்க்கட்சிகள் பிரதமரை தேர்வு செய்ய முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மே 21ல் முக்கிய மீட்டிங்.. அன்றே பிரதமரை தேர்வு செய்வோம் - சந்திரபாபு நாயுடு- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வருவதற்கு இரண்டு நாளுக்கு முன்பே எதிர்க்கட்சிகள் பிரதமரை தேர்வு செய்ய முடிவு எடுத்து இருக்கிறார்கள். பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து அவர்கள் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிகிறது.

    லோக்சபா தேர்தல் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து உள்ளது.

    மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்தியாவின் புதிய பிரதமராக யார் பதவி ஏற்பார், எந்த கட்சி ஆட்சி அமைக்க போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து இருக்கிறது.

    ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர்கள் பழனிச்சாமி - பன்னீர்செல்வம்... டிடிவி.தினகரன் பேச்சு ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர்கள் பழனிச்சாமி - பன்னீர்செல்வம்... டிடிவி.தினகரன் பேச்சு

    என்ன கணிப்பு

    என்ன கணிப்பு

    லோக்சபா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று பல்வேறு கட்சிகளுக்கு ரகசிய தகவல் சென்று உள்ளது. எந்த கட்சியும் தனியாக ஆட்சியை அமைக்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டுமே ஆட்சி அமைக்க முடியாது. மாநில கட்சிகள் ஆதரவு தரும் நபரே ஆட்சி அமைக்க போகிறார் என்று கட்சிகள் நடத்திய கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

    மாறுவார்கள்

    மாறுவார்கள்

    இதனால் தற்போது மாநில கட்சிகள் பிரதமரை தேர்வு செய்யும் சக்திகளாக மாறி இருக்கிறார்கள். அதன்படி மமதா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, மு.க ஸ்டாலின், ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் ஆகியோர் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அவர்கள்தான் பிரதமராக பொறுப்பேற்க போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

    அமித் ஷா

    அமித் ஷா

    ஆனால் இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டு பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா அமைதியாக இருக்க மாட்டார். அதனால்தான் அவர் இப்போதே ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட தொடங்கிவிட்டார். ஆந்திராவில் அவருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக இப்போதே பேச தொடங்கிவிட்டார் அமித் ஷா.

    இதுதான் காரணம்

    இதுதான் காரணம்

    இதுதான் தற்போது எதிர்க்கட்சிகளை ஆலோசனை நடத்த வைத்துள்ளது. அதன்படி மே 23 தேர்தல் முடிவுகள் வந்தாலும் மே 21ம் தேதியே ஆலோசனை நடத்தி, பிரச்சனைகளை தீர்த்து, பிரதமரை முன்கூட்டியே தேர்வு செய்ய இருக்கிறார்கள். சமாதானம் செய்ய வேண்டியவர்களை சமாதானம் செய்து, கசப்புகளை அகற்றி ஒன்றிணைய இருக்கிறார். முழுக்க முழுக்க கணிப்புகள் அடிப்படையில் இந்த தேர்வை செய்ய இருக்கிறார்கள் என்று தகவல் வந்துள்ளது.

    ஏன் ஒற்றுமை

    ஏன் ஒற்றுமை

    தேர்தல் முடிவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை வரவில்லை என்றால் அமித் ஷா மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது. அவர் பேச்சுவார்த்தை நடத்தும் முன், மாநில கட்சிகளை ஒரே குடைக்குள் கொண்டு வரவே இந்த ஆலோசனை கூட்டம் நடப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் எதிர்காலத்தை மே 21 நிர்ணயிக்க போகிறதா, மே 23 நிர்ணயிக்க போகிறதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

    English summary
    Here is the reason Why the Opponent parties planned to elect PM by May 21.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X