டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணையர் விவகாரம்.. உச்சநீதிமன்றம் அதிகார வரம்பிற்குள் நிற்குமாறு மத்திய அரசு வழக்கறிஞர் வாதம்

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றத்திடம் அதிகார வரம்பிற்குள் இருக்குமாறு மத்திய அரசு தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இந்தியாவின் அரசு தலையீடு இன்று சுதந்திரமாக செயல்படும் அமைப்புகளின் முதன்மையானதாக இருப்பது தேர்தல் ஆணையம். நாடாளுமன்ற தேர்தல், மாநில தேர்தல்களை நடத்துவதும் அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்துவதும் தேர்தல் ஆணையமே.

இந்தியாவை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் மகத்தான இடத்தில் இருக்கிறது. தேர்தல் ஆணையம். தற்போது தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருப்பவர் ராஜீவ் குமார்.

விஆர்எஸ் கொடுத்த மறுநாளே தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்- ஆவணங்களை கேட்கும் சுப்ரீம்கோர்ட் விஆர்எஸ் கொடுத்த மறுநாளே தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்- ஆவணங்களை கேட்கும் சுப்ரீம்கோர்ட்

அருண் கோயல்

அருண் கோயல்

இவரை தொடர்ந்து அனுப் சந்திர பாண்டே தேர்தல் ஆணையராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயலை மத்திய சட்ட அமைச்சகம் புதிய தேர்தல் ஆணையராக நியமித்து உள்ளது. இவரது நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.

 ஓய்வுபெற்றவுடன் பதவி

ஓய்வுபெற்றவுடன் பதவி

1985 பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருண் கோயல் மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகத்தின் செயலாளராக பதவி வகித்துவர். நவம்பர் 31 ஆம் தேதி ஓய்வுபெற இருந்த அருண் கோயல் 6 வாரங்களுக்கு முன்பாக ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இவரது விருப்ப ஓய்வு கடிதம் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசால் ஏற்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்த நிலையில் தேர்தல் ஆணையர்கள் நியமனம் ஒரு சார்பாகவும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

 நீதிபதிகள் கருத்து

நீதிபதிகள் கருத்து

வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு ஆற்றல்மிக்க ஒருவரை நாம் தேர்வு செய்ய வேண்டும். அவர் யாருக்கும் அடிபணியக்கூடாது. தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு தன்னை யாராலும் நெருங்க முடியாத அளவுக்கு வலிமையானவராக இருந்த டி.என். சேஷன் போன்றவரே சரியாக இருப்பார்." என்றது.

கொலீஜியம் முறை

கொலீஜியம் முறை

தேர்தல் ஆணையர் நியமனம் அரசியலமைப்பின் முறைப்படியே இருப்பதாக மத்திய அரசு வழக்கறிஞர் வெங்கடரமணி வாதாடிய நிலையில், "தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டு சரியில்லை என்று தெரிகிறது. ஆனால் அதில் மாற்றம் செய்தால் மத்திய அரசு அதை ஏற்காது என எங்களுக்கு தெரியும்." என்றது உச்சநீதிமன்றம்.

அதிகார வரம்பு

அதிகார வரம்பு

இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அருண் கோயல் மின்னல் வேகத்தில் தேர்தல் ஆணையராக எதன் அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டார் என்று வினவியது. இதுகுறித்து பதிலளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி, உச்சநீதிமன்றம் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் தலையிட முடியாது (Hold Mouth) என்று கூறி இதனை விரிவாக அலச வேண்டும் என்றார்.

தேர்வு முறை என்ன?

தேர்வு முறை என்ன?

இதனை கேட்ட உச்சநீதிமன்றம், "இது எந்த மாதிரியான புரிதல்? அருண் கோயலின் தகுதி பற்றி நாங்கள் கேட்கவில்லை. அவர் தேர்வு செய்யப்பட்ட விதத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறோம். அதாவது மத்திய சட்ட அமைச்சர் எதன் அடிப்படையில் 4 பெயர்களை பரிந்துரைக்கிறார்." என்றது. அதற்கு மத்திய அரசு பராமரித்து வரும் டேட்டாஸ்பேஸ் அடிப்படையில் என மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

English summary
The Union government has asked the Supreme Court to remain within its jurisdiction. Which has raised questions regarding the appointment of Arun Goyal as the Election Commissioner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X