இட்லி 20 ரூபாய்..சர்வீஸ் சார்ஜ் 60 ரூபாய்! கடிவாளம் போட்ட மத்திய அரசு! கொந்தளிக்கும் ஹோட்டல் சங்கம்!
டெல்லி : உணவகங்கள் சேவைக் கட்டணங்கள் வசூலிப்பது சட்ட விரோதமாகும். இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், சேவைக் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமோ அல்லது நியாயமற்ற வியாபார நடவடிக்கையோ இல்லை எனவும், இவ்விவகாரம் மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை உருவாக்குகிறது என வியாபாரிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள நடுத்தர அல்லது உயர்தரமான உணவகங்கள் ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றில் சர்வீஸ் சார்ஜ் எனப்படும் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
சேவை கட்டணத்தை வாடிக்கையாளர்களை விரும்பி கொடுக்க வேண்டும் என்பது விதிமுறையாக இருக்கும் நிலையில் பெரும்பாலான உணவகங்களில் இது கடைபிடிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து தொடர் புகார்கள் வாடிக்கையாளர்களிடம் தொடந்து புகார்கள் இருந்து வந்தன.

சேவை கட்டணம் புகார்
இதைடுத்து அதிக கட்டணம் வசூலிக்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் உணவகங்கள் சேவைக் கட்டணங்கள் வசூலிப்பது சட்ட விரோதமாகும். இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் ரோஹித் குமார் சிங், இந்திய உணவக சங்கத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில்," உணவகங்களில் சேவைக் கட்டணங்கள் கட்டாயமாக வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் புகார் அளித்தனர். நுகர்வோரை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமாகும். இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். நுகர்வோர் தவறாக வழிநடத்தப்படக் கூடாது" என கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசின் வழிகாட்டுதல்
மேலும், பில்லில் இருந்து சேவைக் கட்டணத்தை நீக்குமாறு நுகர்வோர் கோரினால் அவர்களை கட்டாயம் அந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. தினமும் இதுபோன்ற புகார்கள் வருகின்றன" எனவும் அந்தக் கடிதத்தில் கூறப்படிருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டிலேயே உணவகங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நுகர்வோர் விவகாரங்கள் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் சட்டவிரோதம்
மேலும் இந்த நடைமுறை சட்டப்பூர்வமானது என்று உணவக உரிமையாளகள் கூறினாலும், இந்த கட்டணம் நுகர்வோரின் உரிமைகளை மோசமாகப் பாதிக்கிறது என்றும் இது ஒரு "நியாயமற்ற வர்த்தக நடைமுறை" என்றும் ரோஹித் குமார் சிங் கூறினார். இதனிடையே, உணவகளில் சேவைக் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமோ அல்லது நியாயமற்ற வியாபார நடவடிக்கையோ இல்லை எனவும், இவ்விவகாரம் மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை உருவாக்குகிறது என வியாபாரிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர். இதுதொடர்பாக பேசிய என்ஆர்ஏஐ தலைவர் கபீர் சிங், சேவை கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமானது அல்ல' என கூறியுள்ளார்.

மக்களிடம் குழப்பம்
உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் உணவு விலையை நிர்ணயம் செய்ய தடை இல்லை என்பதால், சேவை கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது நுகர்வோரின் உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில், சேவைக் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதமோ அல்லது நியாயமற்ற வியாபார நடவடிக்கையோ இல்லை எனவும், இவ்விவகாரம் மக்களிடையே தேவையற்ற குழப்பத்தை உருவாக்குகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் உரிமையாளர்கள்
சேவைக் கட்டணம் வெளிப்படையானது தொழிலாளர் நட்பு மற்றும் பல நீதித்துறை உத்தரவுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்கள் வரி செலுத்துவதால், சேவைக் கட்டணத்தில் இருந்து அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என கூறிய வியாபரிகள் சங்கத்தினர், சேவைக் கட்டணம் என்பது ஊழியர்களின் நலனுக்காகவே உள்ளது, சேவைக் கட்டணம் வசூலிப்பது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் ஒரு பொதுவான நடைமுறையாகும். இது சட்டவிரோதமானதும் இல்லை. எந்தவொரு சட்டத்தையும் மீறவில்லை." என உறுதியாக தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications