டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய குடியரசு தலைவர் தேர்தெடுக்கப்படுவது எப்படி? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் இதோ!

Google Oneindia Tamil News

டெல்லி : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் ஜூலை இறுதியில் முடிவடைய உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதற்கு முன்னதாக தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் எப்படி நடைபெறுகிறது அதன் நடைமுறைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்..

இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் 18ஆம் தேதி அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

5 மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. “உடனே டெஸ்ட் பண்ணுங்க” - ராதாகிருஷ்ணன் சொன்னது என்ன? 5 மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. “உடனே டெஸ்ட் பண்ணுங்க” - ராதாகிருஷ்ணன் சொன்னது என்ன?

Recommended Video

    Presidential Elections 2022 Dates அறிவிப்பு! Election Commission-ன் Update | *Politics

    இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதி அன்று நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படும். இந்த தேர்தலில் 776 எம்பிக்களும், 4,033 எம்எல்ஏக்களும் வாக்களிக்கவுள்ளனர். எனவே, தேர்தலுக்கான மொத்த வாக்ளார் எண்ணிக்கை 4,809 ஆகும்.

    குடியரசு தலைவர் தேர்தல்

    குடியரசு தலைவர் தேர்தல்

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் கருதப்படுகிறார். மற்ற ஜனநாயக நாடுகளைப் போலவே இந்திய குடியரசுத் தலைவரும் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் நேரடியாக அல்ல.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரை வாக்களித்து தேர்ந்தெடுக்கின்றனர் இதன் மூலம் பெருமளவிலான நேரம் மிச்சம் படுத்தப்படுகிறது.

    தேர்தல் தேதி அறிவிப்பு

    தேர்தல் தேதி அறிவிப்பு

    இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் அப்பிரதேசங்களில் எம்எல்ஏக்கள் வாக்களித்து இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். தற்போதைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் எப்படி நடைபெறும் குடியரசுத்தலைவர் எந்த நடைமுறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

    தகுதி என்ன?

    தகுதி என்ன?

    உங்களால் இந்திய ஜனாதிபதி ஆக முடியுமா? ஆம், இந்தியாவின் குடிமகனாக இருந்து சில கூடுதல் நிபந்தனைகளை பூர்த்தி செய்யக்கூடிய யார் வேண்டுமானாலும் இந்தியாவின் குடியரசுத் தலைவராவதற்குத் தகுதியுடையவர்களே. ஒருவர் நிதியாவின் குடியரசுத் தலைவராவதற்கு குறைந்தபட்ச வயது 35 ஆண்டுகளாகவும், வேட்பாளராக போட்டியிடுபவர், மக்களவை உறுப்பினராகத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

    நடத்தை விதிமுறைகள்

    நடத்தை விதிமுறைகள்

    குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவர் லாபம் தரும் எந்தப் பதவியையும் வகிக்கக் கூடாது. கூடுதலாக, ஜனாதிபதி வேட்பாளருக்கு குறைந்தபட்சம் 50 முன்மொழிபவர்கள் இருக்கவேண்ட்ம், அவர்களது ஆதரவு மற்றும் 50 இரண்டாம் நிலை பிரதிநிதிகள் தேவை. அவர்கள் மாநில அல்லது தேசிய அளவிலான மக்கள் பிரதிநிதிகளாக இருக்கலாம். தேவையில்லாத போலி வேட்புமனுக்களை நிராகரிக்க இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் மூலம், வெற்றி வாய்ப்பில்லாத வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்கு விண்ணப்பிக்க மாட்டார்கள்.

    வாக்கு மதிப்பு

    வாக்கு மதிப்பு

    ஜனாதிபதித் தேர்தல்களின் குடியரசு தலைவராக ‘யார்' என்பது மிகவும் சிக்கலானதாக இல்லை என்றாலும், ‘எப்படி' என்பதுதான் சற்று குழப்பமானதாக இருக்கும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் ஒவ்வொரு மாநிலங்களை சேர்ந்த எம்எல்ஏக்களின் வாக்களின் மதிப்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது. இவர்களின் வாக்கு மக்கள்தொகை அடிப்படையில் முன்னரே தீர்மானிக்கப்படுகிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 700. அதன் இறுதி மதிப்பெண்கள் அதற்கேற்ப கணக்கிடப்படும்.

    மக்கள் தொகை அடிப்படை

    மக்கள் தொகை அடிப்படை

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ 208 வாக்கு மதிப்புடம், மாநிலங்களிலேயே அதிக மதிப்பைப் பெற்றுள்ளார். உ.பி.யில் 403 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், அவர்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு 83,824 ஆகும்.

    வாக்குகள் எண்ணிக்கை

    வாக்குகள் எண்ணிக்கை

    அதேபோல், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 80 எம்பிக்களின் வாக்குகளின் மதிப்பு 80 X 700, அதாவது 56,000. இதன் மூதம் 139,824 வாக்குகளுடன் உ.பி.யில் இருந்து மட்டும் ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 12.9 சதவீத வாக்குகள் ஆகும். நாட்டின் மற்ற சிறிய மாநிலங்களில் எம்எல்ஏ வாக்குகளுக்கு குறைவான மதிப்பு உள்ளது. இந்த வகையில், இந்தியா முழுவதும் இருந்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மொத்தம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகவுள்ளன. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரின் வாக்கு மதிப்பு 176ஆக கணக்கிடப்படுகிறது. தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பிர்களின் ஒட்டுமொத்த மதிப்பு 41184ஆக உள்ளது.

    நடைமுறை என்ன?

    நடைமுறை என்ன?


    நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும், அனைத்து மாநிலச் சட்டமன்றப் பேரவைகளின் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை, நாடாளுமன்ற அவைகள் இரண்டிற்கும் தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களை மொத்த எண்ணிக்கையால் வகுக்க வேண்டும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வாக்கின் மதிப்பு 708ஆக உள்ளது. கிட்டதட்ட தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் மதிப்பை விட 4 மடங்கு அதிக மதிப்பு கொண்டதாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    With the term of President Ramnath Govind coming to an end at the end of July, the Election Commission of India has released the schedule for the Presidential elections. Let's take a look at how the Presidential election is conducted and its procedures.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X