"நான் ஒன்னும் உன் சர்வன்ட் இல்லை".. விமானத்தில் கத்திய ஆண்.. விட்டு விளாசிய ஏர் ஹோஸ்ட்.. ப்பா!
டெல்லி: இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் பணிப்பெண் ஒருவர் பயணியை திட்டிய சம்பவம் வைரலாகி உள்ளது.
விமான பணிப்பெண்கள் பொதுவாக எத்தகைய சூழ்நிலையையும் கையாளும் திறன் கொண்டவர்கள். விமானத்தில் பிரச்சனை செய்யும் பயணிகளை கையாள அனைத்து விதமான வித்தைகளையும் கற்றவர்கள்.
பொதுவாக இவர்கள் கோபம் அடைய மாட்டார்கள். பயணிகள் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டாலும் முடிந்த அளவு கோபத்தை வெளிக்காட்டாமல் இருப்பார்கள்.

இண்டிகோ விமானம்
ஆனால் இப்படிப்பட்ட விமான பணிப்பெண்களையே கூட சமயங்களில் சில பயணிகள் கோபப்படுத்தி விடுவார்கள். அப்படி ஒரு சம்பவம்தான் இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் நடந்து உள்ளது. ட்விட்டரில் Er. Gurpreet Singh Hans என்ற நபர் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார். இஸ்தான்புல்லில் இருந்து டெல்லி நோக்கி சென்ற விமானத்தில் நடுவானில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது?
அதன்படி விமானத்தில் ஆண் பயணி ஒருவர் கேட்ட உணவு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் கேட்ட உணவு மெனுவில் இல்லை. இதையடுத்து அவருக்கு முன்னாள் இருக்கும் திரையில் உள்ள உணவை தேர்வு செய்யும்படி அந்த பயணியிடம் விமான பணிப்பெண் கேட்டுள்ளார். அதற்கு அந்த பயணி.. விமான பணிப்பெண்ணிடம் கையை நீட்டி கத்தி இருக்கிறார். இதற்கு அந்த பணிப்பெண் அழுதுகொண்டு பணிப்பெண்கள் இருக்கும் முன்புற அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மோதல்
இதையடுத்து பணிப்பெண் குழுவை சேர்ந்த மூத்த ஹோஸ்ட் அங்கே வந்த அந்த ஆண் பயணியை லெப்ட் ரைட் வாங்கி இருக்கிறார். நீங்கள் எப்படி விரலை நீட்டி பேசலாம். எப்படி கத்தி பேசலாம். உங்களால் என்னுடைய டீம் அங்கே அழுதுகொண்டு இருக்கிறது. நீங்கள் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். உணவு கார்டில் இருப்பதைதான் கொடுக்க முடியும். விமானத்தில் அவர்கள் பல உணவுகளை ஏற்றி உள்ளனர். அதில் இருந்துதான் கொடுக்க முடியும். நீங்கள் போர்டிங் செய்த போது தேர்வு செய்த உணவைதான் எங்களால் கொடுக்க முடியும், என்று கூறியுள்ளார்.

பதில் என்ன?
இதற்கு பதில் அளித்த அந்த ஆண்.. ஏன் என்னிடம் கத்திக்கொண்டு இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த தலைமை பணிப்பெண்.. நீங்கள்தான் கத்தினீர்கள்.. அதற்குத்தான் நான் இப்படி பதில் அளித்து உள்ளேன் என்று கூறி உள்ளார். மேலும் விமான பணிப்பெண்களிடம் நீங்கள் இப்படி பேச கூடாது. நான் நீங்கள் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டு இருக்கிறேன். ஆனால் நீங்கள் எங்கள் பொறுமைக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். எங்கள் குழுவை மதிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

ஆண் பயணி பதில்
அதற்கு பதில் அளித்த அந்த ஆண் பயணி.. நீ பேசாதே.. நீ எங்களுக்கு வேலைக்காரி என்று கூறியுள்ளார். அதற்குநீ பேசாதே.. நான் ஒன்னும் உங்களின் வேலைக்காரி இல்லை.. நான் விமான பணிப்பெண்.. என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள இண்டிகோ விமான நிறுவனம், பயணிகளின் நலன்தான் எங்களின் நோக்கம். அதே சமயம் அந்த பயணி, எங்கள் க்ருவை மிக மோசமாக திட்டி இருக்கிறார். மிக மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்து இருக்கிறார், என்று விளக்கம் அளித்துள்ளனர். அந்த பணிப்பெண் செய்தது சரி என்று சிலரும்.. அவரும் நடந்து கொண்ட விதம் தவறு என்று சிலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications