பெண் பயணி மீது நான் சிறுநீர் கழிக்கவில்லை.. அது என்ன திரவம் தெரியுமா? 'பயங்கரமாக' பழிபோடும் மிஸ்ரா
டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது போதையில் சிறுநீர் கழித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சங்கர் மிஸ்ரா, நீதிமன்றத்தில் அப்படியே ப்ளேட்டை மாற்றி பேசினார்.
நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது ஆஜரான சங்கர் மிஸ்ரா, "நான் அந்த பெண் பயணி மீது சிறுநீர் கழிக்கவில்லை. அவரது அவர் மீது சிறுநீர் கழித்துக் கொண்டார்" எனக் கூறினார்.
100-க்கும் மேற்பட்ட பயணிகள் சங்கர் மிஸ்ராவின் இந்த கீழ்த்தரமான செயலை பார்த்த பின்னரும், வாட்ஸ் அப்பில் அந்தப் பெண்ணிடம் சங்கர் மிஸ்ரா தொடர்ச்சியாக மன்னிப்பு கேட்ட சாட்சியும் போலீஸாரிடம் இருக்கும் போதிலும், அவர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

போதையில் செய்த சேட்டை
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் 26-ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. இதில் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா (34) என்பவரும் இருந்தார். ஆரம்பம் முதலாகவே மதுவை அதிகம் குடித்ததால் உச்சக்கட்ட போதையில் இருந்த அவர், 70 வயது சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். சிறுநீர் கழித்த பிறகும், தனது மர்ம உறுப்பை காட்டியபடி அவர் நின்று கொண்டிருந்தார். பின்னர் சக பயணிகள் திட்டியதை அடுத்து, அவர் அங்கிருந்து நகன்றார்.

மானமும் போனது.. வேலையும் போனது..
இந்த சம்பவம் அந்தப் பெண் பயணி மட்டுமல்லாமல் விமானத்தில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் உறையச் செய்தது. பின்னர், சங்கர் மிஸ்ராவின் இந்த அநாகரீக நடவடிக்கை தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் விமான சிப்பந்திகளிடம் புகார் அளித்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அப்பெண், தனதுக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரனுக்கு அண்மையில் புகார் கடிதம் அனுப்பினார். பின்னர், இந்த விவகாரம் ஊடகங்களிலும் வெளியாகி பூதாகரம் ஆனது. இதன் தொடர்ச்சியாக, பெங்களூரில் பதுங்கியிருந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீஸார் கைது செய்தனர். மேலும், அமெரிக்க நிறுவனத்தில் உயர்ந்த பதவி வகித்து வந்த சங்கர் மிஸ்ரா பணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

மன்னிப்பு கேட்டு கதறிய மிஸ்ரா
இதனிடையே, தன் மீது எந்த புகாரும் கொடுக்க வேண்டாம் என சங்கர் மிஸ்ரா, அந்தப் பெண்ணிடம் வாட்ஸ் அப்பில் தொடர்ச்சியாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். மேலும், விமானத்தில் போதை தெளிந்ததும் தன்னை கைது செய்யுமாறு விமானச் சிப்பந்திகளிடம் தெரிவிக்க வேண்டாடம் எனக் கூறி கதறி அழுதிருக்கிறார் சங்கர் மிஸ்ரா. அதனால்தான், சம்பந்தப்பபட்ட பெண் சங்கர் மிஸ்ரா மீது போலீஸில் புகார் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், ஊடங்களில் வெளியாகி இந்த பூதாகரமானதால் ஏர் இந்தியா நிறுவனம் சங்கர் மிஸ்ரா மீது புகார் அளித்தது. அதன் பேரிலேயே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

"நான் சிறுநீர் கழிக்கவில்லை"..
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சங்கர் மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சங்கர் மிஸ்ரா, தன் மீதான குற்றத்தை திட்டவட்டமாக மறுத்தார். அவர் கூறுகையில், "நான் அந்தப் பெண் பயணி மீது சிறுநீர் கழிக்கவில்லை. அவரே அவர் மீது சிறுநீர் கழித்திருப்பார். அந்தப் பெண்ணுக்கு 70 வயது ஆகிறது. மேலும், சிறுநீர் பை தொடர்பான பிரச்சினையும் அவருக்கு இருக்கிறது. எனவே அவர்தான் சிறுநீர் கழித்திருக்கிறார். மேலும், நான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து அவர் அமர்ந்திருக்க இருக்கைக்கு செல்ல முடியாத அளவுக்கு சீட்கள் இருந்தன. அப்படி நான் சிறுநீர் இருந்திருந்தால் அவரது பக்கத்தில் இருந்த பயணி மீதும் அது பட்டிருக்கும். அப்போது அவர் எந்த புகாரும் அளிக்கவில்லையே" என அவர் வாதிட்டார்.












Click it and Unblock the Notifications