டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்கள் சர்டிபிகேட் தேவையில்லை.. நிர்மலா சீதாராமனுக்கு என்.ராம் பதிலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    Rafale scam: நிர்மலா சீதாராமனுக்கு என்.ராம் பதிலடி- வீடியோ

    டெல்லி: 'தி இந்து நாளிதழின்' ரஃபேல் தொடர்பான செய்திக்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சான்றிதழ் தேவையில்லை என்று அந்த பத்திரிகை குழுமத்தின், சேர்மன் என்.ராம் தெரிவித்துள்ளார்.

    ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பாக பாதுகாப்பு துறை அதிகாரிகளால், அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு எழுதப்பட்ட ஒரு கடிதம் தி இந்து ஆங்கில நாளிதழில் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    அந்த கடிதத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டுடன், பிரதமர் மோடியும் பேரம் பேசியதாக தகவல் வெளியாகியிருந்தது.

    மனோகர் பாரிக்கர் எழுதிய பதில்

    மனோகர் பாரிக்கர் எழுதிய பதில்

    இதன் பிறகு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தில் இந்த கடிதத்திற்கு மனோகர் பாரிக்கர் எழுதிய பதில் நோட் நேற்று வெளியானது. அதில் பிரதமரிடம் பேசிக் கொள்ளுமாறு மனோகர் பாரிக்கர் அதிகாரிகளுக்கு சிபாரிசு செய்து கையெழுத்திட்டிருந்தார். இதை பாஜக தங்களுக்கு சாதகமான விவாதமாக முன்வைத்து வருகிறது.

    நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சீதாராமன்

    இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹிந்து பத்திரிகையில் வெளியான செய்தி உள்நோக்கம் உடையது என்றும், இறந்துபோன குதிரையை ராகுல்காந்தி உயிர்ப்பிக்க முயற்சி செய்கிறார் என்றும் விமர்சனம் செய்திருந்தார்.

    சான்றிதழ் தேவையில்லை

    இதுகுறித்து என்.ராம் நிருபர்களிடம் கூறுகையில், நிர்மலா சீதாராமனிடமிருந்தோ அல்லது பாஜக தலைவர்களிடமிருந்தோ எந்த ஒரு சான்றிதழும் எங்களுக்கு தேவை இல்லை. நாங்கள் வெளியிட்ட செய்தியில் உண்மை உள்ளது. மனோகர் பாரிக்கர் மறுபடியும் அந்த கடிதத்தில் எழுதிய நோட் தொடர்பான தகவலை விசாரிக்க வேண்டியுள்ளது.

    வீண் சுமை

    வீண் சுமை

    ரஃபேல் விவகாரத்தால் ஆளும் தரப்பு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. எனவே அவர்கள் இதை மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள். நிர்மலா சீதாராமனுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை. அப்படி இருக்கும்போது வீணாக இந்த விஷயத்தில் நியாயம் கற்பிக்க முயற்சி செய்து, வீண் சுமையை சுமக்க தேவை கிடையாது.

    விலை நிர்ணயம்

    விலை நிர்ணயம்

    மனோகர் பாரிக்கர் தொடர்பு தனியாக விசாரிக்க வேண்டியது. மனோகர் பாரிக்கருக்கு, தெரிந்து, பிரதமர் அலுவலகம் ரஃபேல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதா, இல்லையா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மோகன் குமார் கூறுகையில், விமானத்திற்கு விலை நிர்ணயம் செய்த விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சகம் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    English summary
    N Ram, Chairman of The Hindu Group: I don’t need any certificate from Nirmala Sitharaman. Now they are in big trouble&trying to cover up. My only advice to her would be, ‘You are not involved in transaction, why you take upon yourself the burden of justifying the indefensible?'
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X