டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாயிகளுக்கு ஆதரவாக மோடி அரசு செயல்படுகிறது.. நம்புங்கள்.. பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் தோமர்

Google Oneindia Tamil News

டெல்லி: மோடி அரசு என்ன செய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும் என்று, மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் 5வது கட்டமாக இன்று பிற்பகலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

I want to assure farmers that Modi govt was fully committed to you: Narendra S Tomar

விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

இரவு வரை, டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியே வந்து நிருபர்களை சந்தித்த அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று நாங்கள் விவசாயிகளுக்கு உறுதியாக கூறியுள்ளோம், அதற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இதை சந்தேகிப்பது ஆதாரமற்றது. இன்னும் கூட, சந்தேகப்பட்டால், அதைத் தீர்க்க அரசு தயாராக உள்ளது.

ஆமா.. இல்லை.. ரெண்டில் ஒன்னு சொல்லுங்க.. பேச்சுவார்த்தை தேவையில்லை.. அரசிடம் விவசாயிகள் திட்டவட்டம்ஆமா.. இல்லை.. ரெண்டில் ஒன்னு சொல்லுங்க.. பேச்சுவார்த்தை தேவையில்லை.. அரசிடம் விவசாயிகள் திட்டவட்டம்

விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும், அரசு பரிசீலிக்கும் என்று நாங்கள் விவசாயிகளிடம் கூறியுள்ளோம். விவசாயிகளின் தலைவர்களிடமிருந்து இந்த பிரச்சினைக்கு பரிந்துரைகள் கிடைத்தால் தீர்வு காண்பது எங்களுக்கு எளிதாக இருந்திருக்கும். ஆனால் பரிந்துரைகள் தரவில்லை.

கோவிட் மற்றும் குளிரான வானிலையை கருத்தில் கொண்டு, வயதானவர்களையும் குழந்தைகளையும், போராட்ட களத்திலிருந்து, வீட்டிற்கு திருப்பி அனுப்புமாறு விவசாய தொழிற்சங்கங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

பிரதமர் மோடியின் தலைமையில், பல விவசாய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலையை கூட அதிகரித்துள்ளோம்.

மோடி அரசு என்ன செய்தாலும் அது விவசாயிகளின் நலனுக்காகவே இருக்கும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். போராட்டத்தில் கட்டுக்கோப்பை பேணியதற்காக விவசாயிகள் சங்கங்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். இன்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 9ம் தேதிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
I want to assure farmers that Modi govt was fully committed to you, & will remain so in future. Under PM Modi's leadership, several agricultural schemes have been implemented. Budget & MSP has also increased: Union Agriculture Minister Narendra S Tomar after 5th round of talks
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X