Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

125 வயதிலும் உடம்பை ஆரோக்கியமாக வைத்துள்ள யோகா குரு! சாப்பாடு சீக்ரெட் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூலம் கடந்த 3 நாட்களுக்கு முன் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருது வழங்கும் விழாவில் யோகா குருவான சுவாமி சிவானந்தா விருது பெற்ற நிகழ்வு பெரிய அளவில் கவனத்திற்கு உள்ளானது.. பல்வேறு காரணங்களுக்காக அந்த வீடியோ வைரலாகி வருகிறது! என்ன நடந்தது என்று பார்க்கலாம்!

Recommended Video

    125 முதியவரால் அதிர்ந்த குடியரசு தலைவர் மாளிகை | Swami Sivananda 125 Years Old

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கிய போது பத்ம ஸ்ரீ விருது வாங்க யோகா குருவான சுவாமி சிவானந்தா நடந்து வந்தார். வெள்ளை உடை, வெள்ளை வேஷ்டியில் திடமாக நடந்து வந்தவர்.. பிரதமர் மோடியை பார்த்ததும் அவருக்கு முன்பாக மண்டியிட்டு மரியாதை செலுத்தினார்.

    யோகா குருவான சுவாமி சிவானந்தா இப்படி செய்ததை பார்த்ததும் பிரதமர் மோடியும் சட்டென எழுந்து, வளைந்து, அவருக்கு பதில் மரியாதை செலுத்தினார். அதோடு நிற்கவில்லை.. இதை முகம் முழுக்க சிரிப்போடு பார்த்துக்கொண்டு இருந்த குடியரசுத் தலைவர் கோவிந்தையும் பார்த்து யோகா குருவான சுவாமி சிவானந்தா மண்டியிட்டு வணங்கினார்.

     யோகா குரு சுவாமி சிவானந்தா

    யோகா குரு சுவாமி சிவானந்தா

    அதன்பின் யாருடைய உதவி இன்றியும் எழுந்து சென்று.. திடமாக நடந்து குடியரசுத் தலைவரிடம் விருதை வாங்கிவிட்டு, மீண்டும் நடந்து சென்றார். இவர் இப்படி செய்ததை பார்த்து மொத்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. குடியரசுத் தலைவரும் இறங்கி வந்து யோகா குருவான சுவாமி சிவானந்தாவிற்கு மரியாதை செலுத்தினார். சரி அதெல்லாம் இருக்கட்டும்.. ஒரு வயதான நபர்.. இப்படி மண்டியிட்டு மரியாதையை செய்ததில் என்ன இருக்கிறது.. இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

     125 வயது

    125 வயது

    அந்த யோகா குரு யோகா குருவான சுவாமி சிவானந்தாவின் வயது எதோ 80, 90 அல்ல.. அவரின் வயது 125! ஆம் நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள், 125 வயது கொண்ட ஒருவர்தான் இப்படி நடந்து, முதுகு வளைந்து, மரியாதை செலுத்தி, கெத்தாக பத்மஸ்ரீ விருது வாங்கினார். இவர் 125 வயதில் இப்படி வேகமாக நடந்து வந்து விருது வாங்கிய நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்து பலர் எழுப்பி இருக்கும் கேள்வி.. இவர் எப்படி இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்? என்ன சாப்பிடுகிறார்? எப்படி இவ்வளவு வருடம் உயிர் வாழ்ந்தார்? என்பதுதான்!

    இதுதான் சீக்ரெட்

    இதுதான் சீக்ரெட்

    125 வருடமாக இவர் கடைப்பிடித்து வரும் மிக எளிமையான வாழ்க்கை முறை, மிக கட்டுக்கோப்பான வாழ்க்கையை இவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இவர் தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தினம் எழுந்தவுடன் உடனே தியானம் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தினமும் 7-8 மணி நேரம் எந்த தொந்தரவும் இன்றி தூங்கும் வழக்கத்தையும் வைத்து இருக்கிறார். இவர் கணினி, போன், பைக் என்று செயற்கையான எந்திரங்கள் எதையும் பயன்படுத்துவது இல்லை.

    நல்ல உறக்கம்

    நல்ல உறக்கம்

    அதேபோல் மிகவும் கட்டுக்கோப்பான உணவு பழக்க வழக்கத்தையும் இவர் கடைப்பிடித்து வந்துள்ளார். வறுத்த உணவுகளை சாப்பிடாமல் எளிமையாக வேகவைத்த உணவுகளை மட்டுமே இவர் சாப்பிட்டு வந்துள்ளார். அதோடு எண்ணெயை பெரும்பாலும் பயன்படுத்தாமல் தவிர்த்து இருக்கிறார். அதிகமாக அரிசி, பருப்பு மட்டுமே உண்டு இருக்கிறார். அதிலும் கூட மூச்சு முட்ட சாப்பிடாமல் எளிமையாக சாப்பிடும் வழக்கத்தை இவர் பின்பற்றி உள்ளார்.

    நல்ல உணவு

    நல்ல உணவு

    காலையில் எழுந்தவுடன் தியானம், பின்னர் சூரிய நமஸ்காரம், யோகா பயிற்சி, பின்னர் சில கிலோ மீட்டர் நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளை இவர் தீவிரமாக பின்பற்றி வந்துள்ளார். தினமும் குளிப்பது, தன்னுடைய உடைகளை தானே துவைப்பது, செடிகளை பராமரிப்பது, வீட்டு பணிகளை செய்வது என்று ஒழுக்கமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து இருக்கிறார்.

    சேவை குணம் கொண்டவர்

    சேவை குணம் கொண்டவர்

    சாலை ஓரம் உள்ள பிச்சைக்காரர்கள், தொழுநோய் கொண்டவர்களுக்கு உணவு வழங்குவது, அவர்களுக்கு சேவை செய்வது போன்ற பணிகளையும் இவர் செய்து வருகிறார். இதெல்லாம் போக இந்தத் ஆடம்பரமும் இன்றி பாயில் தலையணை இன்றி தூங்குவது, பிற்பகலில் தூங்குவதை தவிர்ப்பது போன்ற வழக்கத்தையும் இவர் மேற்கொண்டு வந்துள்ளார். அதேபோல் பால், பழங்கள் சாப்பிடாமல், எளிமையாக வீட்டு கொல்லைப்புறத்தில் இருக்கும் காய்கறிகளை மட்டுமே உண்டு வந்து இருக்கிறார். இதுவே இத்தனை வயதிலும் யோகா குருவான சுவாமி சிவானந்தா திடகாத்திரமாக நல்ல உடல் நலத்துடன் இருக்க காரணம் ஆகும்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+