குழந்தைகளுக்கு நோய் எதிப்பு சக்தி திறன் அதிகம்.. தொடக்க பள்ளிகளை திறக்கலாம்.. ஐ.சி.எம்.ஆர் சொல்கிறது
டெல்லி: குழந்தைகளுக்குநோய் எதிப்பு சக்தி திறன் அதிகமாக இருப்பதால் தொடக்க பள்ளிகளை திறப்பது குறித்து பரீசிலிக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்((ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று சுகாதார அமைச்சக மாநாட்டில் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

ஆரம்ப பள்ளிகள் திறக்க்கலாம்
பெரியவர்களை விட குழந்தைகள் வைரஸ் தொற்றுநோய்களைக் கையாள முடியும் என்பதை நாங்கள் தெளிவாக அறிவோம். ஆன்டிபாடி வெளிப்பாடு பெரியவர்களைப் போலவே குழந்தைகளிடமும் ஒத்திருக்கிறது. சில நாடுகள் தங்கள் ஆரம்ப பள்ளிகளை எந்த கொரோனா அலைகளிலும் மூடவில்லை என்று ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் டாக்டர் பால்ராம் பார்கவா கூறினார். .

67.6 சதவீதம் பேர்
ஐ.சி.எம்.ஆர் ஜூன்-ஜூலை மாதங்களில் சமீபத்திய கணக்கெடுப்பை நடத்தியது. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய ஒரு மூத்த அதிகாரி, ''6 வயதுக்கு மேற்பட்ட இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு அல்லது 67.6 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி ததிறன்(ஆன்டிபாடிகள்) கொண்டிருப்பது தெரியவந்தது'' என்றார்.

40 கோடி மக்களுக்கு எச்சரிக்கை
அதே வேளையில் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு ஆன்டிபாடிகள் இல்லை, அதாவது சுமார் 40 கோடி மக்கள் இன்னும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். கணக்கெடுக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களில் 85 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிராக ஆன்டிபாடிகளைக் கொண்டிருந்தனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பாதுகாப்பு விதிகள் முக்கியம்
மேற்கண்ட நம்பிக்கையின் கதிர் இருப்பதைக் காட்டுகின்றன. ஆனால் இதில் மனநிறைவுக்கு இடமில்லை, பொருத்தமான கொரோனா நடத்தை விதிகளை பின்பற்றப்பட வேண்டும். சமூக, மத மற்றும் அரசியல் கூட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். , அத்தியாவசியமற்ற பயணங்களை ஊக்கப்படுத்த வேண்டும். முழுமையாக தடுப்பூசி போட்டால் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தி இருக்கிறது.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications