இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்த சர்வதேச நாணய நிதியம்! ஆனாலும் சீனாவை விட அதிகம்
டெல்லி: 2022-23 நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டைச் சர்வதேச நாணய நிதியம் குறைத்து உள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டது. கொரோனா உருமாறிக் கொண்டே இருந்ததால், பல நாடுகளும் அவ்வப்போது கட்டுப்பாடுகளை விதித்து வந்தன.
இதனால் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதில் இருந்து மீண்டு வர சில ஆண்டுகள் வரை ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை புதிய விமான நிலையம்.. மொத்தம் 4 ஏரியா பரிந்துரை.. 2

குறைப்பு
இந்நிலையில், 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி என்னவாக இருக்கும் என்பது குறித்து சர்வதேச நிதியம் புதிய மதிப்பீடுகளை வெளியிட்டு உள்ளது. அதில் 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.4%ஆக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, இந்தியாவின் வளர்ச்சி 8.2%க இருக்கும் என்று சர்வதேச நிதியம் மதிப்பிட்டு இருந்த நிலையில், இப்போது 0.8 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

காரணம்
இருப்பினும், இது இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ள 7.2% வளர்ச்சி விகிதத்தை விடச் சற்று அதிகமாகும். சமீபத்தில் வெளியான உலகப் பொருளாதார அவுட்லுக் ரிப்போர்ட்டில் 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.1% வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து பணத்தை எடுப்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.

ஒப்பீட்டளவில் அதிகம்
அதேநேரம் மற்ற வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா உடன் ஒப்பிடுகையில் இந்தியா வளர்ச்சி அதிகமாகவே உள்ளது அமெரிக்காவிலும் சீனாவிலும் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் சர்வதேச பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் எனக் கூறப்பட்டு உள்ளது. இது மேலும் தொடரலாம் என்றும் சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது.

சர்வதேச பொருளாதாரம்
சர்வதேச பொருளாதார வளர்ச்சியைச் சர்வதேச நிதியம் 3.2% ஆகக் குறைத்துள்ளது. கொரோனா பரவலால் பலவீனமடைந்து இருந்த சர்வதேச பொருளாதாரம், உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் மேலும் மோசமானது. இதனால் உணவு மற்றும் மின்சாரத்திற்கான விலை அதிகரித்து உள்ளதாகவும் இதனால் உலகின் பல நாட்டு ரிசர்வ் வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாகவும் சர்வதேச நியம் தெரிவித்து உள்ளது,

சீனா
நமது அண்டை நாடான சீனாவின் வளர்ச்சி வெறும் 3.3ஆக மட்டுமே இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் சீனாவின் குறைந்தபட்ச வளர்ச்சி விகிதமாக இருக்கும். கடுமையான கொரோனா ஊரடங்கு, வினியோக சங்கிலியில் உள்ள சிக்கல் காரணமாகவே சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கா
உலக வல்லரசான அமெரிக்காவின் வளர்ச்சி 2.5%ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்தி வருவது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதே உலக பொருளாதார வளர்ச்சி குறையக் காரணம் என்றும் சர்வதேச நிதியம் தெரிவித்து உள்ளது.