2021ல் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள் எவ்வளவு தெரியுமா.. அதிலும் போலி 2,000 தாள்கள் இத்தனையா?
டெல்லி: கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் சுமார் 21 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதிலும் குறிப்பாக 2000 ரூபாய் நோட்டுகள் மட்டும் 12 கோடி என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார்.
அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுக்கள் விவரம்
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு புதிதாக ரூ 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கள்ள நோட்டுக்கள் பயன்பாடு முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால், கள்ள நோட்டுக்கள் புழக்கம் குறையவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுக்கள் விவரம் மற்றும் அதில் 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் எத்தனை என்ற விவரம் வெளியாகியுள்ளது.

60 சதவீத கள்ளநோட்டுகள்
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த ஆண்டு 20.39 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் போலி 2 ஆயிரம் ருபாய் தாள்கள் மட்டும் ரூ.12.18 கோடியாகும். அதாவது கிட்டத்தட்ட 60 சதவீததத்திற்கும் மேலானவை 2 ஆயிரம் ரூபாய் தாள்களே ஆகும். 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகே கள்ள நோட்டுக்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு ரூ.15.92 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக
2017, 2018, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் முறையே ரூ.28.10 கோடி, ரூ.17.95 கோடி, ரூ.25.39 கோடி, ரூ.92.17 கோடி மற்றும் 20.39 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு அதாவது பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக ரூ.15.498 கோடி போலி ரூபாய் தாள்கள் கைப்பற்றப்பட்டன. 2021 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுக்களில் 500 ரூபாய் தாள்கள் ரூ.6.6 கோடி மதிப்புக்கும், ரூ. 200 தாள்கள் 45 லட்சம் மதிப்புக்கும் கைப்பற்றப்பட்டது.

2,000 ரூபாய் நோட்டுகள்
அதிகபட்சமாக தமிழகத்தில் 5 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கேரளாவில் 1.8 கோடி மற்றும் ஆந்திராவில் 1 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ளநோட்டுக்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்காகவே புதிதாக 2,000 ரூயாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதாக அரசு கூறும் நிலையில், தற்போது தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளில் கள்ளநோட்டுகளில் அதிகம் அச்சிடப்பட்டது 2,000 ரூபாய் நோட்டுகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications