டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாக். தீவிரவாத முகாம்களை அடித்து நொறுக்கிய மிராஜ் 2000.. ரபேலின் "பங்காளி"!

டஸால்ட் நிறுவனம் மூலம் பிரான்சில் உருவாக்கப்பட்ட ரபேல் குடும்பத்தை சேர்ந்த மிராஜ் 2000 விமானம்தான் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வெளுத்த 'மிராஜ்'..1000 கிலோ வெடி பொருட்கள்.. தீவிரவாத முகாம்கள் காலி.. வீடியோ

    டெல்லி: ரபேல் போர் விமானங்களைத் தயாரிக்கும் பிரான்ஸின் டஸால்ட் நிறுவனத்தின் தயாரிப்புதான் மிராஜ் 2000. இந்த ரக போர் விமானங்களை வைத்துதான் பாகிஸ்தானில் புகுந்து விளையாடியுள்ளது இந்திய விமானப்படை.

    இது ஒரு விசித்திரமான நாள் என்றுதான் சொல்லவேண்டும், ரபேல் வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட இருக்கிறது . அதே நாளில், அதே ரபேல் குடும்பத்தை சேர்ந்த மிராஜ் விமானம் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்து இருக்கிறது.

    இன்று பாகிஸ்தானில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்த பயன்படுத்திய மிராஜ் 2000 ரக போர் விமானம் நீண்ட காலமாக இந்திய விமானப்படையின் முக்கிய தாக்குதல் விமானமாகும்.

    மிராஜ் தாக்குதல்

    மிராஜ் தாக்குதல்

    பாகிஸ்தானில் இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்திய விமானப்படை மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது மிராஜ் 2000 ரக விமானம் ஆகும். மொத்தம் 12 மிராஜ் 2000 விமானங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    டஸால்ட்

    டஸால்ட்

    மிராஜ் 2000 விமானம் பிரான்சின் டஸால்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுவது ஆகும். இதே நிறுவனம்தான் ரபேல் போர் விமானங்களையும் தயாராக்கிறது. ரபேல், மிராஜ் 2000 விட அதிக திறன் வாய்ந்தது.

    சிங்கிள் என்ஜின்

    சிங்கிள் என்ஜின்

    மிராஜ் 2000, சிங்கிள் என்ஜின் கொண்ட 4வது தலைமுறை போர் விமானம் ஆகும். 1972ல் இது உருவாக்கப்பட்டது. கடந்த மூன்று வருடத்திற்கு முன் புதிய தொழில்நுட்பத்துடன் அப்டேட் செய்யப்பட்டது. இதன் புதிய மாடலான மிராஜ் 2000என் மற்றும் 2000டி ஆகிய விமானங்களும் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

    மல்டி ரோல்

    மல்டி ரோல்

    இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளில் மிராஜ் இன்னும் புழக்கத்தில் உள்ளது. அதிகபட்சம் மணிக்கு 2,336 கிமீ வேகத்தில் செல்ல கூடியது. 17,060 மீட்டர் உயரம் வரை செல்ல கூடியது. இது 13,800 கி வெடிபொருட்களை சுமந்து சென்று தாக்க கூடியது. விமானத்தின் எடை 7,500கி ஆகும். 19,000 கிலோ எடை வரை இது எந்த பாதிப்பும் இன்றும் பறந்து செல்லும். அப்படித்தான் இன்று 1000 கி எடை பொருட்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தி இருக்கிறது.

    இந்தியாவிடம் 50 விமானங்கள்

    இந்தியாவிடம் 50 விமானங்கள்

    இந்தியாவிடம் 2 வகையான மிராஜ் போர் விமானங்கள் உள்ளன. அதாவது பழைய மிராஜ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அதி நவீன மிராஜ். மொத்தமாக நம்மிடம் இருப்பது 50 மிராஜ் போர் விமானங்கள் ஆகும். இதில் பழைய விமானம்தான் அதிகம். அதாவது 42 விமானங்கள் உள்ளன. புதிய விமானங்கள் 8தான் உள்ளன.

    கார்கிலில் கலக்கியவன்

    கார்கிலில் கலக்கியவன்

    இந்த மிராஜ் லேசுப்பட்ட ஆள் இல்லை. கார்கில் போரின்போது நாயகனாக விளங்கியவன் மிராஜ். பாகிஸ்தான் படையினரை ஓட ஓட விரட்டியது மிராஜ்தான் . அன்று காட்டிய அதே மிரட்டலை இன்றும் மிராஜ் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    India attack Pakistan: Mirage 2000, A family of Dassault Rafale made surgical strike 2.0, hits terrorists.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X