டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லேசர் குண்டுகளை வைத்து வித்தை காட்டிய இந்தியா.. தீவிரவாதிகளை துல்லியமாக தாக்கியது இப்படித்தான்!

லேசர் குண்டுகளை வைத்து இந்திய விமானப்படை பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது மிக மிக துல்லியமாக தாக்குதல் நடத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இப்படித்தான் தாக்குதல் நடந்ததா.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ

    டெல்லி: லேசர் குண்டுகளை வைத்து இந்திய விமானப்படை பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது மிக மிக துல்லியமாக தாக்குதல் நடத்தி உள்ளது.

    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமானப்படை இன்று தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் 4 முகாம்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் பாகிஸ்தான் பலத்த அதிர்ச்சியில் இருக்கிறது. இந்தியாவின் தாக்குதலை கொஞ்சமும் எதிர்பார்க்காமல் நிலைகுலைந்து போய் உள்ளது. லேசர் குண்டுகளை பயன்படுத்தி இந்தியா இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.

    லேசர் வரலாறு

    லேசர் வரலாறு

    இந்த லேசர் குண்டுகள் என்பது லேசர் வழிகாட்டுதலுடன் தாக்கும் குண்டுகள் ஆகும். வியட்நாம் போரில் அமெரிக்கா இந்த குண்டுகளை பயன்படுத்தித்தான் தாக்கியது. 1960களில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இந்த குண்டுகள் பயன்பாட்டிற்கு வைத்தது. இந்தியாவிலும் இப்போது இது பயன்படுத்தப்படுகிறது.

    எப்படி நடக்கும்

    எப்படி நடக்கும்

    இதன் மூலம் தாக்குதல் நடத்துவதே மிகவும் சுவாரசியமான விஷயம் ஆகும். முதலில் தாக்க வேண்டிய இடம், பொருள் மீது விமானம் மூலம் லேசர் கதிர்களை பாய்ச்சுவார்கள். அந்த சிறிய லேசர் ஒளிகளை பின்பற்றித்தான் இந்த குண்டுகள் சென்று தாக்கும். எங்கு லேசர் கதிர் குறி வைத்து இருக்கிறதோ, அதற்கு ஏற்றபடி வழியை மாற்றி சென்று தாக்குதல் நடத்தும்.

    மாறி செல்லும்

    மாறி செல்லும்

    இதன் முக்கியத்துவம் என்னவென்றால், அந்த தாக்கப்பட வேண்டிய பொருள் இடையில் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டாலும், இது வழியை மாற்றி சென்று தாக்கும். எங்கு அந்த லேசர் ஒளி இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி வழியை மாற்றி தாக்குதலை நடத்தும். இதனால் ஒருபோதும் குறி தப்பாது.

    ஏன் இதை பயன்படுத்துகிறீர்கள்

    ஏன் இதை பயன்படுத்துகிறீர்கள்

    இதை பயன்படுத்துவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பொதுவாக காடுகள், மிக கடுமையான இடங்களில் குறி வைத்து தாக்குவது கடினம். அது போன்ற நேரங்களில், இந்த லேசர் தாக்குதல் பெரிய அளவில் உதவியாக இருக்கும். பிரச்சனை எதுவும் இன்றி மிக எளிதாக தாக்க வேண்டிய இடத்தை அடித்து நொறுக்கலாம்.

    பாகிஸ்தானில் எப்படி

    பாகிஸ்தானில் எப்படி

    இதை வைத்துதான் தற்போது பாகிஸ்தானில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. லேசர் மூலம் பாலகோட், சகோதி, முசாபராபாத் ஆகிய பகுதிகளில் நான்கு தீவிரவாத முகாம்களை பல நூறு அடிகள் உயரத்தில் இருந்து குறி வைத்து இருக்கிறார்கள். அதன்பின் மிக துல்லியமாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    அப்படித்தான்

    அப்படித்தான்

    இதன் மூலம்தான் மிக துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. தாக்குதல் நடத்தி, அந்த குண்டுகள் தரையை தொடும் முன், போர் விமானங்கள் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து இருக்கிறது என்று கூறுகிறார்கள். இதனால் இந்திய வீரர்கள் பாதுகாப்பாக இந்திய எல்லைக்கு திரும்பி வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    India attacks Pakistan: This is how laser-guided bombs helped in Surgical Strike 2 today morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X