டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமைதி முக்கியம்.. லடாக்கில் அத்துமீற வேண்டாம்.. படைகளை வாபஸ் வாங்குங்கள்.. சீன தூதர் கோரிக்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: துப்பாக்கி சுடுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுத்துவதை தவிர்த்துவிட்டு, இந்தியா எல்லையில் உடனடியாக படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நடந்த இந்திய - சீன அமைதி பேச்சுவார்த்தையில் செய்யப்பட்ட 5 உடன்படிக்கை கொண்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ இடையே நடந்த இந்த ஆலேசனை மூலம் எல்லையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.

லடாக் மோதல் இப்போது முடிய வாய்ப்பில்லை இன்னும் பல நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். எல்லையில் இப்போது அமைதி நிலவுகிறது, ஆனால் இந்த அமைதி நீண்ட நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.

லடாக்கில் புது எழுச்சி.. சீனாவை ''டீல்'' செய்வது இப்படிதான்.. உலக நாடுகளுக்கு பாடம் எடுத்த இந்தியா!லடாக்கில் புது எழுச்சி.. சீனாவை ''டீல்'' செய்வது இப்படிதான்.. உலக நாடுகளுக்கு பாடம் எடுத்த இந்தியா!

தூதர் என்ன சொன்னார்

தூதர் என்ன சொன்னார்

இந்த நிலையில் துப்பாக்கி சுடுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுத்துவதை தவிர்த்துவிட்டு, இந்தியா எல்லையில் உடனடியாக படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய - சீன பிரச்சனை சுமுகமாக முடிய வேண்டும்.எல்லை பிரச்சனையில் இரண்டு நாடுகளும் வெல்ல வேண்டும். இரண்டு நாட்டு உறவு முன்னோக்கி செல்ல வேண்டும்.இரண்டு நாட்டு உறவு சரியான திசையில் பயணிப்பது அவசியம்.

இரண்டு நாடுகள்

இரண்டு நாடுகள்

இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மீட்டிங் நம்பிக்கை தருகிறது. 5 உடன்படிக்கை கொண்ட ஒப்பந்தத்தை இவர்கள் செய்துள்ளனர். இதனால் எல்லையில் நிலைமை சரியாகும் என்று நம்புகிறேன். எல்லையில் அமைதி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை மிக முக்கியம். ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தைகள் எல்லையில் தொடர வேண்டும்.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

எல்லை பிரச்சனையில் இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எல்லையில் இந்தியா மோதலை தவிர்க்க வேண்டும்.எல்லையில் நிலைமை மோசமானால் உடனே பேச்சுவார்த்தை மூலம் சரி செய்ய வேண்டும். இந்தியாதான் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தி அமைதியை கெடுத்தது.

எல்லை பிரச்சனை

எல்லை பிரச்சனை

எல்லையில் இந்தியா படைகளை குவிப்பதை நிறுத்த வேண்டும். எல்லையில் இந்தியா தவறாக ரோந்து பணிகளை செய்கிறது. இந்தியா எல்லையில் அத்துமீறும் வகையில் செய்யும் அனைத்து செயல்களையும் உடனே நிறுத்த வேண்டும். துப்பாக்கி சூடு உள்ளிட்ட ஆபத்தான செயல்களை உடனே இந்தியா தவிர்க்க வேண்டும். எல்லையில் இருந்து இந்தியா உடனே படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

English summary
India China Standoff: Stop trespassing, pull back troops from Ladakh says Chinese envoy to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X