இந்தியாவில் கொரோனா பாதிப்பை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம் - 391 பேர் மரணம்
இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,447 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 391 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி: இந்தியாவில் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,447 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 7,886 கொரோனா தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இதன் மூலம் இதுவரை இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 3,41,62,765 ஆக உள்ளது.
கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் உலக மக்களை தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது. 28 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் முதல் அலையை விட இரண்டாவது அலை தீவிரமாக பரவியது. கொத்துக் கொத்தாக மரணமடைந்தனர். ஜனவரி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் படிப்படியாக வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த 21 வது நாளாக 10ஆயிரத்திற்கும் கீழே பதிவாகியுள்ளது.

7447 பேர் பாதிப்பு
இந்தியாவில் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,447 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 47 லட்சத்து 61 ஆயிரத்து 168 ஆக அதிகரித்துள்ளது. கேராளாவில் 3404 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 877 பேரும் மேற்கு வங்கத்தில் 660 பேரும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. டெல்லியில் 85 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.

7,886 பேர் குணமடைந்தனர்
கடந்த 24 மணிநேரத்தில் 7,886 கொரோனா தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இதன் மூலம் இதுவரை இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 3,41,62,765 ஆக உள்ளது. நாடு முழுவதும் 86,415 தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

391 பேர் உயிரிழப்பு
ஒரேநாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 391ஆக உயர்ந்துள்ளது. நேற்று 343 பலியான நிலையில் இன்று தொற்று பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 4,76,869 ஆக உயர்ந்துள்ளது.

1,35,99,96,267
நாடு முழுவதும் இதுவரை 1,35,99,96,267 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.கடந்த 24 மணி நேரத்தில் 70,46,805 டோஸ்கள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
Recommended Video

இந்தியாவில் ஓமிக்ரான்
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் ஓமிக்ரான் வைரஸ் தொற்று தற்போது 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் 77 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், ஹைதராபாத்தில் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தெலுங்கானாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தற்போது வரை 87 பேருக்கு ஓமிக்ரான் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications