இதுதான் இந்தியா.. உக்ரைன் ரஷ்யா போருக்கு இடையே சத்தமே இன்றி சாதனை.. வியந்து பார்க்கும் மேற்குலகம்!
டெல்லி: உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுக்க பல நாடுகளில் பஞ்சம் ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. ஆனால் இதை தடுக்கும் வகையில் இந்தியா பல முக்கியமான பணிகளை செய்துள்ளன.. அவை என்ன? இந்தியா நிகழ்த்திய அந்த சாதனை என்ன என்று பார்க்கலாம்!
Recommended Video
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இன்னும் முடியவில்லை. தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிவிட்டன.
அங்கு தற்போது போர் நடக்கவில்லை என்றாலும் உக்ரைனில் மற்ற பகுதிகளான டான்பாஸ், மரியபால் போன்ற பகுதிகளில் தொடர்ந்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் போர்
ரஷ்யாவின் பல்வேறு ஏற்றுமதி மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதேபோல் டாலர் வர்த்தகம் மேற்கொள்ளும் swift வர்த்தக மெசேஜிங் தளத்தில் இருந்தும் ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யாவால் பல்வேறு பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. கருங்கடலில் ரஷ்ய போர் கப்பல்கள் இருப்பதால் உக்ரைன் நாடும் சர்வதேச அளவில் ஏற்றுமதியை மேற்கொள்ள முடியவில்லை.

ரஷ்யா தடை
உலகில் அதிகமாக கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடு ரஷ்யாதான். ஆனால் இந்த போர் காரணமாக ரஷ்யாவால் உலக அளவில் அதிக அளவில் கோதுமை அனுப்ப முடியவில்லை. கடந்த நிதியாண்டில் ரஷ்யா 37,267,014 டன் கோதுமையை ஏற்றுமதி செய்தது. அதாவது 37 மில்லியன் டன். ஆனால் இந்த முறை அந்த அளவிற்கு ரஷ்யாவால் அவ்வளவு கோதுமையை ஏற்றுமதி செய்ய முடியாது.

கோதுமை ஏற்றுமதி
இந்த நிலையில்தான் இந்தியா சத்தமே இன்றி தனது கோதுமை ஏற்றுமதியை உயர்த்தி உள்ளது. அதன்படி கடந்த நிதியாண்டில் 7.85 மில்லியன் கோதுமையை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியா பொதுவாக 2.1 மில்லியன் டன் கோதுமை மட்டுமே ஏற்றுமதி செய்வது வழக்கம். இதற்கு முந்தைய வருடங்களில் இந்தியாவின் ஏற்றுமதி இந்த அளவில் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் இந்த வருடம் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியா கோதுமை
மேற்கு உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி உயர்ந்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் கோதுமை ஏற்றுமதி முடங்கி உள்ள நிலையில்தான் இந்தியா துரிதமாக செயல்பட்டு கோதுமை ஏற்றுமதியை உயர்த்தி உள்ளது. இது மார்ச் 21 வரை மட்டுமே செய்யப்பட்ட கோதுமை ஏற்றுமதி ஆகும். அதன்பின் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி இன்னும் அதிகரித்துள்ளதாகவும், விரைவில் இதன் அளவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த நாடுகள்
சர்வதேச அளவில் கோதுமை பஞ்சம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியா அதிக அளவிற்கு வங்கதேசத்திற்கு கோதுமை ஏற்றுமதி செய்துள்ளது. அதேபோல் தென்கொரியா, இலங்கை, ஓமன், கத்தார் ஆகிய நாடுகளுக்கும் இந்தியா கோதுமை ஏற்றுமதி செய்துள்ளது.

29 சதவிகிதம் ரஷ்யா
சர்வதேச அளவில் கோதுமை ஏற்றுமதியில் 29 சதவிகிதம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து மட்டும்தான் வருகிறது. இந்த நிலையில் உலக நாடுகளுக்கு உதவும் வகையில் இந்தியா கோதுமை ஏற்றுமதியை அதிகரித்துள்ளது. ஏற்கனவே உக்ரைன் போரால் இந்தியாவிற்கு ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கி வருகிறது. இது ஒரு பக்கம் இந்தியாவிற்கு பலன் அளித்துள்ள நிலையில் தற்போது கோதுமை ஏற்றுமதி மூலமும் இந்தியா பயன் அடைந்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications