ஆபரேஷன் தேவி சக்தி.. ஆப்கனிலிருந்து இதுவரை 800 இந்தியர்களை மீட்ட வெளியுறவு அமைச்சகம்
டெல்லி: ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் மீட்டு வரும் பணிகளுக்கான நடவடிக்கைக்கு "ஆபரேஷன் தேவி சக்தி" என்று இந்திய வெளியுறவுத்துறை பெயர் சூட்டியுள்ளது. இதுவரை இந்திய நாட்டை சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட குடிமக்களை மீட்டுக் கொண்டு வந்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் முழுமையாக கட்டுப்படுத்த தொடங்கியதும் அங்கிருந்து பல நாட்டைச் சேர்ந்தவர்களும் தங்கள் தாயகம் கிளம்ப தொடங்கியுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்தவர்களும் பணி மற்றும் தொழில் நிமித்தமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் வசித்து வந்தனர். அவர்கள் உடனடியாக இந்தியாவிடம் கோரிக்கை விடுத்த போதிலும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக அனைவரையும் அழைத்து வரவில்லை.
இந்த நிலையில்தான் அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் கணிசமான இந்தியர்கள் குவைத் அல்லது கத்தாருக்கு விமானம் மூலமாக சென்று, அங்கிருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
விமர்சனங்கள் எழுந்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தொடங்கியிருக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ஆபரேஷன் தேவி சக்தி தொடர்ந்துகொண்டிருக்கிறது, 78 பேர் காபூல் நகரத்திலிருந்து துசான்பே வழியாக இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். இதற்காக, ஏர் இந்தியா, இந்திய விமானப்படை, வெளியுறவுத் துறை அமைச்சக குழு ஆகியோருக்கு சல்யூட் என்று தெரிவித்துள்ளார்.
கஜகஸ்தான் நாட்டில் அமைந்து இருக்கிறது துசான்பே நகரம் . அங்கிருந்து விமானம் மூலமாக 25 இந்திய குடிமக்கள் உட்பட 78 பேர் டெல்லி நகரத்திற்கு, அழைத்துவரப்பட்டனர். இதைத்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கித்தவித்த 800 இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகஸ்ட் 16ம் தேதி முதல் இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் நடவடிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஈடுபடத் தொடங்கியது என்பது நினைவிருக்கலாம்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications