இந்தியாவில் கொரோனா தடுப்பூசி.. இதுவரை 41.7 கோடி டோஸ் வழங்கப்பட்டுள்ளது.. மத்திய அரசு
டெல்லி : கொரோனா இரண்டாவது அலைகளின் போது ஆக்ஸிஜன் சப்ளை பற்றாக்குறையால் எத்தனை பேர் இறந்தனர் என்பது குறித்த அரசியல் கட்சிகளின் சண்டைக்கு நடுவே, இந்தியா 21ம் தேதி நிலவரப்படி 41.7 கோடி கோவிட் தடுப்பூசியை மக்களுக்கு வழங்கி உள்ளது.
மாநிலங்களில் அளித்த புள்ளி விவர பட்டியலின் படி பார்த்தால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த மரணமும் ஏற்படவில்லை என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தது. இதை கேட்டு கடும் கோபம் அடைந்த மாநிலங்களில் முக்கியமானது மகாராஷ்டிராவும் டெல்லியும். டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசோ, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பொய் சொன்னதாக கூறியது.

மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசோ தங்கள் அன்புக்குரியவர்களை ஆக்சிஜன் பற்றாக்குறையால் இழந்தவர்கள் மத்திய அரசை நீதிமன்றத்திற்கு இழுக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
இந்த சண்டைகளுக்கு நடுவே கொரோனா தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் வேகமாக முன்னேறி வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு வரை, 32.5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு 415,225,632 டோஸ்களை இந்தியா வழங்கியுள்ளது. ஜூலை 20 ஆம் தேதி வரை 8.5 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 24 கோடிக்கும் அதிகமானோருக்கு ஒரே ஒரு டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 417,656,752 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் மக்களுக்கு 2,083,892 டோஸ்கள் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை அன்று 18-45 வயதுக்குட்பட்டவர்களில், 1,004,581 பேருக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டது, 95,964 டோஸ் இரண்டாவது டோஸாக வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக, நாடு முழுவதும் இந்த வயதிற்குட்பட்ட 130,446,413 நபர்கள் முதல் டோஸைப் பெற்றுள்ளனர் . 5,317,567 பேர் தடுப்பூசி இயக்கத்தின்போது இரண்டாவது டோஸை பெற்றுள்ளனர்.
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை 18-45 வயதுக்குட்பட்டவர்களில் 10 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகளை வழங்கியுள்ளன. ஆந்திரா, அசாம், சத்தீஸ்கர், டெல்லி, ஹரியானா, ஜார்கண்ட், கேரளா, தெலுங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசியை அளித்துள்ளன.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications