நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்த தினம்.. உற்சாகமாக கொண்டாடிய ஐஎன்ஏ டிரஸ்ட்
டெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125வது பிறந்த தினம், INA அறக்கட்டளை மற்றும் FICCI ஆகிய அமைப்புகளால் இணைந்து நடத்தப்பட்டன.

நேதாதி சுபாஷ் சந்திரபோஸ், சுதந்திரத்திற்கு ஆற்றிய பங்களிப்பை நினைவு கூறுவது இதன் நோக்கம். இளைஞர்களுக்கு தேசத்தின் மீது நம்பிக்கை, தேசப்பற்று ஏற்படுத்துவது தொடர்பாக இதில் விவாதிக்கப்பட்டது.

ஐஎன்ஏ அமைப்பின், துணை தலைவர் ஜேஎஸ் ராஜ்புத் பேசுகையில், நாட்டு மக்கள் நேதாஜி சுதந்திரத்திற்காற்றிய பங்களிப்பை அறிய வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். நேதாஜியை பற்றி அறிவதுதான், நிஜமான தேசப்பற்று.

நேதாஜி சுதந்திர இயக்கத்தில் செய்த பங்களிப்பு ஒட்டுமொத்த அளவில் அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கிறோம். நேதாஜி பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும். வாழ்கையில் என்ன நடந்தாலும் சுயநலத்தை தவிர்த்து தேச நலன்தான் முக்கியம் என நிரூபித்தவர் நேதாஜி. யார் நமது வரலாற்றாசிரியர்கள்? அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு ஆதரவாக எழுதுகிறார்கள். அதனால் தான் பல விஷயங்கள் அங்கீகரிக்கப்படாத நிலை உள்ளது. அரசியல் காரணங்களுக்காக வரலாற்றின் ஒரு பக்கத்தை மட்டும் பதிவு செய்கிறார்கள் என்றார்.

இன்வெஸ்ட் இந்தியா அமைப்பின், துணைத் தலைவ்ர ஹிண்டால் சென்குப்தா கூறுகையில், சுபாஷ் சந்திர போஸின் 125 வது ஆண்டு விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் இந்த ஆண்டு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுவாமி விவேகானந்தருக்கும், நேதாஜிக்கும் நிறைய கொள்கை தொடர்புகள் உள்ளன. இந்திய வரலாற்றில் இந்த இரண்டு புகழ்பெற்ற நபர்கள் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றி நான் பேசினேன். மக்கள் இவர்கள் இருவரையும் விரும்புகிறார்கள். சுபாஷ் சந்திர போஸின் நினைவுகள் இந்தியாவின் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications