டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவில் இருந்து மீளும் இந்தியா - படிப்படியாக குறையும் பாதிப்பு - 98.04 % குணமடைந்தனர்

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 14,313 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த 224 நாட்களில் குறைந்த அளவாகும்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது இன்று புதிதாக 14,313 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் 18,166 பேருக்கும், நேற்று 18,132 பேருக்கும் வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில் பண்டிகை காலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவது மக்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,313 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. கேரளாவில் மட்டும் 6,996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,39,85,920 ஆக அதிகரித்துள்ளது.

India recovering from corona - gradually declining vulnerability - healed 98.04%

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 26,579 பேர் குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,33,20,057 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.04 % ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு மிக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 181 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,50,963 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்போர் விகிதம்1.33 % ஆக உள்ளது. மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,14,900 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 95,89,78,049 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 65,86,092 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 11,81,766 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 58,50,38,043 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா திங்களன்று கொரோனா வைரஸ் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. 26 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் 19 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் கொரோனா மொத்த எண்ணிக்கை 6,01,894 பேராக உயர்ந்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 7,71,000 பேராக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவின் கோவிட் -19 எண்ணிக்கை 17 மாதங்களில் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது திங்களன்று 1,736 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 16, 2020 அன்று, மகாராஷ்டிராவில் 1,606 பேர் பாதிக்கப்பட்டனர்.
மும்பையிலும் தினசரி பாதிப்பு 500 க்கும் குறைவாகக் குறைந்தது. திங்களன்று மொத்தம் 401 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை நாடு 95 கோடியை தாண்டிய பிறகு இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தை பாராட்டினார்."உலகின் மிகப்பெரிய வெற்றிகரமான தடுப்பூசி இயக்கம் முழு வீச்சில் நடைபெற்றது. இந்தியா 95 கோடி #கோவிட் 19 தடுப்பூசி அளவுகளை நிறைவு செய்கிறது. 100 கோடி தடுப்பூசி மருந்துகளை நிர்வகிப்பதை நோக்கி வேகமாகச் செல்கிறது. விரைவில் தடுப்பூசி போட்டு உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் அதையே செய்ய ஊக்குவிக்கவும்! "என்று அவர் ஒரு ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே இந்தியாவில் 12-17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட முதல் தடுப்பூசி, ZyCoV-D நாடு முழுவதும் உள்ள தனியார் துறை மருத்துவமனைகளுக்கும் கிடைக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

English summary
The incidence of corona in India has been steadily declining for the past few days and today 14,313 new cases have been diagnosed. The decline in corona infections during the festive season has boosted confidence among the population as 18,166 people were infected with the virus the day before yesterday and 18,132 yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X