இந்தியாவில் பல மாதங்களுக்கு பிறகு.. 10 ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா கேஸ்கள்.. உஷார் மக்களே
இந்தியா முழுவதும் புதிதாக 13,154 பேருக்கு புதிய கொரோனா தொற்று பரவியுள்ளது. 961 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி: இந்தியாவில் மீண்டும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. ஒரே நாளில்
13,154 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,48,22,040 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலையில் இந்தியாவில் 4 லட்சம் பேர் வரை தினசரி பாதிக்கப்பட்டனர். 145 கோடி டோஸ்வரை நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் 7 ஆயிரத்திற்கும் கீழே பதிவான நிலையில் மீண்டும் 13 ஆயிரம் பேருக்கு புதிய தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3,42,58,778 பேர் பாதிப்பு
நாடு முழுவதும் புதிதாக 13,154 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,48,22,040 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 7,486 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,58,778 ஆக உயர்ந்துள்ளது.

268 பேர் உயிரிழப்பு
கொரோனாவால் 268 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,80,860 ஆக உயர்ந்தது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 82,402 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோர் விகிதம் 98.38% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.38% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.24% ஆக குறைந்துள்ளது.

961 பேருக்கு ஓமிக்ரான்
நாடு முழுவதும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 961 பேராக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 1,43,83,22,742 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 63,91,282 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் கட்டுப்பாடு
ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு 144 தடை
கொரோனாவை கட்டுப்படுத்த மும்பையில் இன்று முதல் ஜனவரி 7ம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்து மகாராஷ்டிர அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.மேலும் ஜனவரி 7ம் தேதி வரை உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் உள்ளரங்கு மற்றும் வெளிப்புற புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications