இந்தியாவில் 40,120 பேருக்கு கொரோனா பாதிப்பு... 42,295 பேர் மீண்டனர் - 585 பேர் மரணம்
இந்தியாவில் புதிதாக 40,120 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 42,295 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டு வந்தவர்கள் அதிகமாக உள்ளனர்.
டெல்லி : கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் சற்றே கட்டுப்பட்டுள்ள நிலையில் தினசரி பாதிப்பு 40ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,120 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,21,17,826 ஆக அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு 30ஆயிரத்திற்கும் கீழே குறைந்த நிலையில் இன்று மேலும் 40 ஆயிரம் பேருக்கு மேல் அதிகரித்துள்ளது.
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு, மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு உலக நாடும் இதுவரை கொரோனாவில் இருந்து மீளவில்லை. இந்தியாவில் இரண்டாவது அலை மிகத்தீவிரமாக வீசியது.

முதல் அலையில் அமெரிக்காவில் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது அலையில் இந்தியாவில் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 43 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கடும் நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 42,295 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,13,02,345 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ட குணமடைந்தவர்களின் விகிதம் அதிகமாக உள்ளது.
கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 585 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,30,254 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 3,85,227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. முதலில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் மத்தியில் தயக்கம் இருந்தாலும், 2வது அலையில் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டதால் இப்போது மக்கள் பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 52,95,82,956 பேராக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,31,574 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்!












Click it and Unblock the Notifications