டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடம் -மெக்சிகோவில் உயிரிழப்புகள் திடீர் அதிகரிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பும், மெக்சிகோவில் மரணங்களும் திடீரென அதிகரித்துள்ளன.

உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,23,78,777 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,56,585 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 71,82,394 ஆகவும் உயர்ந்துள்ளது.

India’s Coronavirus count world’s 3rd highest, 25,803 positives on Thursday

அமெரிக்காவில் கொரோனாவின் கொடூர தாக்கம் ஓயவே இல்லை. அமெரிக்காவில் ஒரே நாளில் 61,051 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32,19,983 ஆக உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 946 பேர் உயிரிழந்ததால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 1,35,808 ஆக அதிகரித்தது.

கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள பிரேசிலில் ஒரே நாளில் 42,907 பேருக்கு கொரோனா உறுதியானது. இங்கு ஒரேநாளில் 1,199 பேர் கொரோனாவால் மாண்டனர். இதனால் பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,759,103 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 69,254 ஆகவும் இருக்கிறது.

தமிழகத்தில் ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா.. வேகமாக குறையும் ஆக்டிவ் நோயாளிகள் தமிழகத்தில் ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா.. வேகமாக குறையும் ஆக்டிவ் நோயாளிகள்

இந்தியா உலக அளவில் கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஒரே நாளில் 25,803 பேருக்கு கொரோனா உறுதியானது. கொரோனாவால் 479 பேர் ஒரே நாளில் இந்தியாவில் மரணித்தனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பானது 7,94,855 ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 21,623 ஆகவும் உள்ளது.

மெக்சிகோவில் ஒரே நாளில் 782 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இங்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,995 ஆகும். அதேபோல் தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13,674 ஆக இருந்தது.

English summary
India still third highest Coronavirus Cases Country in the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X