டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 கோடி டோஸ்களை தயாரிக்கும் சைடஸ் கேடில்லா.. இந்தியாவில் வேகமெடுக்கும் வேக்சின் உற்பத்தி.. குட்நியூஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: 5 கோடி வேக்சின் டோஸ்களை உருவாக்க போவதாக இந்திய நிறுவனமான சைடஸ் கேடில்லா தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் மொத்தமாக வேக்சின் உற்பத்தி வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது கோவேக்சின் மற்றும் கோவிட்ஷீல்ட் வேக்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவேக்சின் இந்தியாவை சேர்த்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட வேக்சின் ஆகும்.

ஒரே நாளில்.. 14 ஐஏஎஸ், 20 ஐபிஎஸ் அதிகாரிகள் மொத்தமாக திடீர் டிரான்ஸ்பர்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஒரே நாளில்.. 14 ஐஏஎஸ், 20 ஐபிஎஸ் அதிகாரிகள் மொத்தமாக திடீர் டிரான்ஸ்பர்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி

இதையடுத்து இன்னொரு இந்திய நிறுவனமான குஜராத்தை சேர்ந்த சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் வேக்சினும் விரைவில் இந்தியாவில் அனுமதி பெற உள்ளது. ZyCoV-D என்று அழைக்கப்படும் இந்த நிறுவனத்தின் வேக்சின் தற்போது மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது.

மே மாதம்

மே மாதம்

இந்த நிலையில் வேகமாக மூன்றாம் கட்ட சோதனையை முடித்துவிட்டு மே மாதம் இறுதியில் இந்த ZyCoV-D வேக்சினுக்கு அனுமதி வாங்கும் முடிவில் சைடஸ் கேடில்லா உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் டிஎன்ஏ வகை கொரோனா வைரஸ் ஆகும் இது. அகமதாபாத்தில் உள்ள இந்த நிறுவனம் உருவாக்கி இருக்கும் ZyCoV-D டிஎன்ஏ வேக்சின் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் எல்லாம் மிகவும் பாதுகாப்பான முடிவுகளை கொடுத்துள்ளது, அதேபோல் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுத்துள்ளது.

ZyCoV-D வேக்சின்

ZyCoV-D வேக்சின்

பொதுவாகவே டிஎன்ஏ வேக்சின் அதிக பாதுகாப்பு கொண்டது. கொரோனா வைரஸின் ஜீன்கள் பிரதி எடுக்கப்பட்டு அதன் டிஎன்ஏவை வைத்து இந்த வேக்சின்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால் இந்த வேக்சின் மிக வேகமாக உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். அதேபோல் இது மிகவும் பாதுகாப்பானது, இதை அதிக குளிரான வெப்பநிலையில் வைக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.

மாற்ற முடியும்

மாற்ற முடியும்

அதேபோல் மியூட்டேட் ஆகும் வேக்சின்களுக்கு எதிராக இந்த டிஎன்ஏ வேக்சினை உடனே மாற்றி, அப்டேட் செய்து கொண்டே இருக்க முடியும். இந்த நிலையில் ZyCoV-D வேக்சினை சைடஸ் கேடில்லா நிறுவனம் அனுமதி கிடைத்தவுடன் உற்பத்தி செய்ய உள்ளது. மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் இதற்கு அனுமதி அளித்ததும் இதன் 5 கோடி டோஸ்களை இந்த வருட இறுதிக்குள் உருவாக்குவோம் என்று சைடஸ் கேடில்லா தெரிவித்துள்ளது.

5 கோடி

5 கோடி

5 கோடி டோஸ்களை வேகமாக உருவாக்கும் திறன் உள்ளதாக சைடஸ் கேடில்லா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் மொத்த வேக்சின் உற்பத்தி உயரும் என்று எதிர்பார்க்கப்ப்படுகிறது. தற்போது மத்திய அரசு கணித்து இருக்கும் கணக்குப்படி அடுத்த 7 மாதங்களில் இந்தியாவின் வேக்சின் உற்பத்தி 300 கோடியாக இருக்கும்.

எப்படி

எப்படி

மே மாதம் 8.8 கோடி, ஜூன் மாதம் 15.81 கோடி, ஆகஸ்ட் மாதம் 36.6 கோடி, டிசம்பர் மாதம் மட்டும் 65 கோடி டோஸ் மொத்தமாக உற்பத்தி செய்யப்படும். தற்போது இருப்பதைவிட 7 மடங்கு கூடுதலாக டிசம்பர் மாதம் உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய அரசு கணித்துள்ளது. ஆகஸ்ட் - டிசம்பர் வரை 268 டோஸ் வேக்சிகள் உருவாக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சைடஸ் கேடில்லா வேக்சிம்

சைடஸ் கேடில்லா வேக்சிம்

இதில் சைடஸ் கேடில்லா வேக்சினும் அடக்கம். முன்னதாக இந்தியாவில் 2021 டிசம்பர் மாதத்திற்குள் 216 கோடி டோஸ் வேக்சின் தயாரிக்கப்படும், இதன் மூலம் இந்திய குடிமக்கள் எல்லோருக்கும் இந்த வருட இறுதிக்குள் வேக்சின் போட முடியும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் தேசிய வேக்சின் வல்லுநர் குழு தலைவர் வினோத் குமார் பால் தெரிவித்துள்ளார்.

எத்தனை

எத்தனை

மொத்தமாக 8 வேக்சின்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்படும்.அதன்படி கோவிட்ஷீல்ட் 75 கோடி டோஸ், கோவாக்சின் 55 கோடி டோஸ் உற்பத்தி செய்யப்படும். இது போக பயோ இ சப்யூனிட் வேக்சின் 30 கோடி, சைடஸ் கேடில்லா டிஎன்ஏ வேக்சின் 5 கோடி, நோவாவேக்ஸ் 20 கோடி டோஸ், பாரத் பயோ டெக் இன்டராநாஸல் 10 கோடி டோஸ், ஜெனோவா எம்ஆர்என்ஏ 6 கோடி டோஸ், ஸ்புட்னிக் 15.6 கோடி டோஸ் இந்தியாவில் கிடைக்கும் என்று வினோத் குமார் பால் தெரிவித்துள்ளார்.

English summary
India vaccine production will improve: Indian company Zydus Cadila aims to make 5 Cr doses by this year end.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X