டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறுநீர், வியர்வையை முகர்ந்து பார்த்து கொரோனா தொற்றை கண்டு பிடிக்கலாம் - ராணுவ நாய்களுக்கு பயிற்சி

மோப்ப சக்தி மூலம் கொரோனா தொற்றை கண்டறிவது தொடர்பாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. காஸ்பர் என்ற பெயருடைய காக்கர் ஸ்பேனியல் வகை நாய் கொரோனா பாதிப்பு உள்ள மாதிரியை அடையாளம் காட்டியது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ராணுவத்தின் மோப்ப நாய்களுக்கு மனிதர்களின் சிறுநீர் மற்றும் வியர்வை மாதிரிகளை வைத்து கொரோனா தொற்றை கண்டறிதவற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிப்பிப்பாறை மற்றும் காக்கர் ஸ்பேனியல் வகை நாய்களுக்கு அளிக்கப்படும் இந்த பயிற்சி நல்ல பலனை கொடுத்துள்ளது.

கொரோனா நோய் தொற்றை கண்டறிய பிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மனிதர்களின் சிறுநீர் மற்றும் வியர்வை மாதிரிகளை வைத்து கொரோனா தொற்றை கண்டறிதவற்கு, இந்திய ராணுவத்தின் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Indian Army dogs trained for detection of COVID19

தமிழ்நாட்டின் சிப்பிப்பாறை மற்றும் காக்கர் ஸ்பேனியல் வகை நாய்களுக்கு அளிக்கப்படும் இந்த பயிற்சி நல்ல பலனை கொடுத்துள்ளது. டெல்லி மற்றும் சண்டிகர் முகாம்களில் இதுவரை 3806 வீரர்களின் மாதிரிகளை பரிசோதித்ததில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

மோப்ப சக்தி மூலம் கொரோனா தொற்றை கண்டறிவது தொடர்பாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில், காஸ்பர் என்ற பெயருடைய காக்கர் ஸ்பேனியல் வகை நாய், நொடிப்பொழுதில் கொரோனா பாதிப்பு உள்ள மாதிரியை அடையாளம் காட்டி வியக்க வைத்தது. இதேபோன்று பயிற்சி பெற்ற சிப்பிப்பாறை வகை நாய்களான ஜெயா, மணி ஆகிய நாய்களும் உடனிருந்தன.

English summary
Indian Army dogs have been trained for real-time detection of COVID19. Cocker Spaniel named Casper seen participating in a live demonstration. Jaya and Mani, two dogs of indigenous breed Chippiparai, were also present.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X