டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈரான் அமைச்சருடன்...ராஜ்நாத் சிங்...திடீர் சந்திப்பு...என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையே இருநாட்டு ஒத்துழைப்பு, பிராந்திய மேம்பாடு குறித்து ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அமிர் ஹடாமி, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் டெஹ்ரானில் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் மூன்று நாள் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியா வரும் வழியில் டெஹ்ரானில் இறங்கினார். இது இவரது திட்டமிடலில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அங்கு இறங்கிய அவர் அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளார்.

Iran minister hold bilateral ties with Indian counterpart Rajnath singh

இதுகுறித்து பின்னர் அறிக்கை வெளியிட்டு இருந்த ஈரான் அரசு, ''இந்தியா, ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இருநாடுகளுக்கு இடையிலான மற்றும் சர்வதேச நாடுகள் பற்றி சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தகவல் தெரிவித்து இருக்கும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம், ''இருநாடுகள் இடையிலான ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் பாதுகாப்பு பிரச்சனைகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலோசிக்கப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஈரான் ராணுவ கமாண்டர் குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட பின்னர் இந்திய அரசின் உயர் பொறுப்பு வகிக்கும் ராஜ்நாத் சிங் ஈரான் சென்று இருந்தார். பாரசீக வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவி வருவது குறித்து இருநாட்டு சந்திப்பில் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருநாட்டு சந்திப்பின்போது ஈரான், அமெரிக்கா இடையிலான சமீபத்திய பதற்றம், ஈரான் மீது 2015ஆம் ஆண்டின் பொருளாதாரத் தடையை மீண்டும் புகுத்துவதற்கு அமெரிக்க முயற்சித்தது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் இடையிலான பேச்சுவார்த்தையை இந்தியா வரவேற்று இருந்தது. இதை ஈரான் எதிர்த்து இருந்தது. இதுவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் காஷ்மீரில் சர்ச்சைக்குள்ளான பகுதிகளில் சீனாவின் அத்துமீறல் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஈரானும், சீனாவும் சமீப காலமாக நெருங்கிய உறவு வைத்துக் கொண்டுள்ளன. விரைவில் இருநாடுகளும் பெரிய அளவில் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருக்கிறது. ஆனால், சீனாவுடனான இந்தியாவின் உறவு முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

உலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய போட்டோகிராபர்!உலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய போட்டோகிராபர்!

ஈரானில் சபாஹர் துறைமுகம் கட்டும் பணியில் இந்தியாவை ஈரான் கழற்றிவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. சீனாவை சேர்த்துக் கொண்டு இருந்தது. மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானை இந்தியா அடைய வேண்டுமானால் ஈரான் நுழைவு வாயில் போல் இருப்பதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் விஷயத்திலும் இந்தியாவுக்கு ஈரானின் ஆதரவு தேவைப்படுகிறது என்று கூறப்படுகிறது. எனவே தான் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறித்தும் இருநாடுகளும் ஆலோசனை மேற்கொண்டுள்ளன.

English summary
Iran minister hold bilateral ties with Indian counterpart Rajnath singh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X