அனல் பறக்கும் ஜார்க்கண்ட்.. திடீரென களமிறங்கிய அமலாக்கத்துறை.. ரெய்டுகளில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரி!
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அம்மாநில ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் செளபேவுக்கு சொந்தமான இடங்களில் செவ்வாய்க்கிழமையன்று அதிரடி சோதனை நடத்தினர். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி, ராய்ப்பூர் உள்ளிட்ட வினய் குமார் செளபேவுக்கு சொந்தமான 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 13, நவம்பர் 20 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் தேர்தல் களத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் களமிறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் செளபேவுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனையை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் முதன்மை செயலராக இருந்தவர்தான் இந்த வினய் குமார் செளபே.
ஏற்கனவே டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசும் மதுபான கொள்கையில் சிக்கி இருக்கிறது. இதனால் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவால் தமது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications