டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜேஎன்யூ மாணவ தலைவரை குறி வைத்து கொடூரமாக தாக்கிய கும்பல்.. 30 பேர் படுகாயம்.. தீவிர சிகிச்சை!

டெல்லியில் ஜேஎன்யூ மாணவர்கள் நேற்று இரவு மோசமாக தாக்கப்பட்டனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 06-01-2020 | Morning News | oneindia tamil

    டெல்லி: டெல்லியில் ஜேஎன்யூ மாணவர்கள் நேற்று இரவு மோசமாக தாக்கப்பட்டனர். இதில் காயம் அடைந்த 30க்கு மேற்பட்ட மாணவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சிஏஏவிற்கு எதிரான எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து நேற்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் தாக்கப்பட்டனர். மாணவர்கள் இப்படி இரக்கமின்றி தாக்கப்பட்டது நாடு முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இந்த தாக்குதலை நடத்தியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக நாடு முழுக்க போராட்டம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

     ஜேஎன்யூவில் என்ன நடந்தது? டெல்லி கமிஷ்னரிடம் போன் போட்டு விசாரித்த அமித் ஷா.. முக்கிய ஆலோசனை! ஜேஎன்யூவில் என்ன நடந்தது? டெல்லி கமிஷ்னரிடம் போன் போட்டு விசாரித்த அமித் ஷா.. முக்கிய ஆலோசனை!

    என்ன தாக்குதல்

    என்ன தாக்குதல்

    இந்த தாக்குதலில் நேற்று 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடுமையாக காயம் அடைந்தனர். முக்கியமாக டெல்லி ஜேஎன்யூ அமைப்பின் தலைவர் ஆய்ஷா கோஷ் காயம் அடைந்தார். இந்த தாக்குதலே இவரை குறி வைத்துதான் நடத்தப்பட்டது என்று கூறுகிறார்கள்.

     என்ன கொள்கை

    என்ன கொள்கை

    அதேபோல் இடதுசாரி கொள்கை கொண்ட ஆசிரியர்களும் தாக்கப்பட்டுள்ளனர். சுமார் 12 ஆசிரியர்கள் இதில் மோசமாக காயம் அடைத்தனர். இவர்கள் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மோசமான காயம்

    மோசமான காயம்

    தாக்கப்பட்ட மாணவர்களில் 8 மாணவர்கள் தலையில் கடுமையான காயத்துடன் கஷ்டப்பட்டு வருகிறார்கள். 7 மாணவிகளும் தாக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு கை, கால், நெஞ்சு எலும்புகள் முறிந்துள்ளளது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவசர ஆம்புலன்ஸ்

    அவசர ஆம்புலன்ஸ்

    நேற்று இந்த மாணவர்களை காப்பாற்ற அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அங்கு கலவரம் செய்த ஏபிவிபி அமைப்பினர் ஆம்புலன்ஸை உள்ளேயே விடவில்லை. இதனால் பல மாணவர்கள் அவசர சிகிச்சை பெற முடியாமல் சிக்கலுக்கு உள்ளானார்கள்.

    English summary
    JNU Attack: 30+ students injured including 12 professors yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X