ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரத்தில் யாரை காப்பாற்ற முயற்சி?.. கனிமொழி எம்பி கேள்வி
Recommended Video
டெல்லி: நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் 53 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஐஐடி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்,டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி, பிற மாநிலங்களில் உள்ள ஐஐடிகளில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும், மர்மமான முறையில் இறந்து கிடப்பதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில் கேரள மாநிலத்திலிருந்து சென்னை ஐஐடியில் மேற்படிப்பு படித்து வந்தவர் பாத்திமா லத்தீப். இவர் கொல்லம் அருகே உள்ள கிளி கொல்லூர் பிரியதர்ஷினி நகரை சேர்ந்த அப்துல் லத்தீப்பின் மகள்.

தற்கொலை
படிப்பில் முதல் மாணவியான பாத்திமா கடந்த 8-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தனது செல்போனில் தான் தற்கொலை செய்துக் கொண்டதற்கு இணை பேராசிரியர் சுதர்சனம் பத்மநாபன்தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

பாத்திமா லத்தீப்
இதையடுத்து இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது. இதனிடையே இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது பாத்திமா லத்தீப் விவகாரம் எதிரொலித்தது.

தற்கொலை
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி பேசுகையில் பாத்திமா லத்தீப் மரணத்தில் மர்மம் உள்ளது. நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் 53 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது ஏன்.

வழக்குப் பதிவு
மாணவ, மாணவிகளை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பாக இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை. யார் காரணம் என அந்த மாணவியே ஒருவரின் பெயரை தெரிவித்த நிலையில் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் மீது ஒரு வழக்குப் பதிவும் செய்யப்படவில்லை.

பாரபட்சம்
மாணவி தற்கொலை விவகாரத்தில் யாரை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது? பாத்திமா லத்தீப்பின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐஐடியில் பாரபட்சம் காட்டப்படுவதாலேயே மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மாணவியின் அறையில் அவர் தொங்கியிருந்த கயிறு போலீஸார் வருவதற்குள் அகற்றப்பட்டுவிட்டது.

என்ன நியாயம்
மகளின் தற்கொலை பற்றி புகார் கொடுத்த தந்தை மீது ஐஐடி நிர்வாகம் போலீஸில் வழக்கு தொடுத்திருப்பது என்ன நியாயம்? என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். அது போல் கொல்லம் எம்பி பிரேமசந்திரனும், பாத்திமா விவகாரத்தை எழுப்பினார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications