கர்நாடகாவில் கொட்டும் கனமழை.. காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..இன்று கூடும் மேலாண்மை ஆணையம்!
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்கே ஹல்தர் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. கர்நாடகாவில் கனமழை கொட்டி காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடகா திறந்துவிடுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அடிப்படையில் காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டன. கர்நாடகாவில் மழை அளவு, அணைகளின் நீர் அளவு உள்ளிட்டவைகளை ஆராய்ந்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் பகிர்வு அளவை பரிந்துரைப்பதுதான் காவிரி ஒழுங்காற்று குழு. இந்த குழுவானது காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைக்கும். இதனை பரிசீலனை செய்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட உத்தரவிடக் கூடியது காவிரி மேலாண்மை ஆணையம்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் கடந்த ஏப்ரல் 4-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான 3.6 டிஎம்சி தண்ணீரை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்குரியது) கர்நாடகா உடனே திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழ்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் கர்நாடகா அதிகாரிகளோ, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறக்கவே முடியாது என்றனர். கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது எனவும் அவர்கள் தரப்பு சுட்டிக்காட்டியது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனையும் கர்நாடகா அரசு ஏற்க மறுத்து தண்ணீரை திறந்துவிடவில்லை.
இந்த நிலையில் கர்நாடகாவில் கடந்த பல நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர், மண்டியா மாவட்டங்களில் மழை வெளுக்கிறது. இதனையடுத்து காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு கர்நாடகா அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
இந்தப் பின்னணியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இன்றைய கூட்டத்திலாவது தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடுமா? என்பது எதிர்பார்ப்பு.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications