Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நான் தமிழகத்தை சேர்ந்தவள்.. எனக்கு ராமரை யார் என்றே தெரியாது!" இணையத்தில் புயலை கிளப்பிய ஜோதிமணி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராமர் குறித்து கரூர் எம்பி ஜோதிமணி கூறிய கருத்துக்கள் இணையத்தில் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி இந்த அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டி உள்ள நிலையில், 2024 தேர்தலுக்கு முன்பு இதைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே கரூர் எம்பியும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஜோதிமணி ராமர் குறித்துக் கூறிய கருத்துக்கள் இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

 ராமர் யாரென்றே தெரியாது

ராமர் யாரென்றே தெரியாது

இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் இப்போது வைரலாகி உள்ளது. அதில் கரூர் எம்பி ஜோதிமணி, "நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். எனக்கு ராமர் என்றால் யார் என்றே தெரியாது. ஏனென்றால், நாங்கள் மூதாதையரை வழிபடும் முறையையே பின்பற்றி வருகிறோம். நீங்கள் தமிழ்நாட்டில் யாரிடம் வேண்டுமானாலும் போய் கேட்டுப் பாருங்கள். தமிழ்நாட்டில் நீங்கள் எங்கும் ராமர் கோயிலைப் பார்க்க முடியாது.

 எங்கள் வழிபாடு முறை

எங்கள் வழிபாடு முறை

நான் ஒவ்வொரு வாரமும் எங்கள் குடும்பத்தினர் வழிபடும் கோயிலுக்குச் செல்வேன். அது மூதாதையர் வழிபாடு. பல தெற்கு மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் இந்த வழிபாட்டு முறையே பின்பற்றுகின்றனர். நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினரும் தங்கள் மூதாதையரையே கடவுளாகக் கருதி வழிபடுகின்றனர். இதைத் தான் நாங்கள் சொல்ல முயல்கிறோம்.

நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

நான் ராமாயணம், மகாபாரதம் படித்துள்ளேன். ஆனால் வழிபாடு என்று வரும் போது மூதாதையரையே நாங்கள் வழிபடுவோம்" என்று அவர் அதில் கூறுகிறார். இது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து, பலரும் ஜோதிமணியின் கருத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு தரப்பினர் ஜோதிமணி குறிப்பிட்டதை போல நாட்டில் மூதாதையரை வழிபடும் பழக்கமே இருந்து வந்துள்ளதாகக் கூறி வருகின்றனர்.நான் ராமாயணம், மகாபாரதம் படித்துள்ளேன். ஆனால் வழிபாடு என்று வரும் போது மூதாதையரையே நாங்கள் வழிபடுவோம்" என்று அவர் அதில் கூறுகிறார். இது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து, பலரும் ஜோதிமணியின் கருத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு தரப்பினர் ஜோதிமணி குறிப்பிட்டதை போல நாட்டில் மூதாதையரை வழிபடும் பழக்கமே இருந்து வந்துள்ளதாகக் கூறி வருகின்றனர்,

 தாக்கு

தாக்கு

அதேநேரம் மற்றொரு தரப்பினர் ஜோதிமணியின் கருத்தை மிகக் கடுமையாகச் சாடி வருகின்றனர். இப்போது இப்படிப் பேசும் இவர்கள், 2024 மக்களவை தேர்தல் சமயத்தில் ராமர் பெயரைச் சொல்லி வாக்கு கேட்பார்கள் என்று நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர். மேலும், சிலர் ராமரைத் தெரியாது என எப்படிச் சொல்ல முடியும். ராமேஸ்வரம், மதுராந்தகம் போன்ற ராமாயணத்தில் இடம் பெற்றுள்ள பல ஊர்கள் தமிழ்நாட்டில் உள்ளது ஜோதிமணிக்கு தெரியாதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+