இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,316 பேருக்கு கொரோனா.. கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கேஸ்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இதுவரை 32,033,333 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஓரளவு குறைந்தாலும் இன்னும் பெரிய அளவில் சரிவு ஏற்படவில்லை.

தினசரி கேஸ்கள் இன்னும் 20 ஆயிரத்திற்கும் கீழ் செல்லவில்லை. இது மூன்றாம் அலைக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் அலை பாதிப்பு வேகம் எடுக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் இதுவரை 429,183 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 468 பேர் கொரோனா காரணமாக இந்தியாவில் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை குறைந்தது ஓரளவு நிம்மதியை கொடுத்தாலும் இன்னும் புதிய கேஸ்களின் எண்ணிக்கை குறையவில்லை. இந்தியாவில் 31,210,624 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.

கேரளா

கேரளா

இதனால் தற்போது 393,526 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 37,241 பேர் புதிதாக இந்தியாவில் குணமடைந்து உள்ளனர். இந்தியாவில் இன்னும் கேரளாவில்தான் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கேரளாவில் 35,86,693 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 21,119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில்தான் தினசரி கேஸ்கள் அதிகமாக உள்ளது, அதேபோல் ஆக்டிவ் கேஸ்களும் இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிகமாக உள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

கேரளாவில் இதுவரை மொத்தமாக 33,96,184 டிஸ்சார்ஜ் ஆக்கியுள்ளனர். 18,493 பேர் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கேரளாவில் 1,71,985 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கேரளாவில் என்னதான் கொரோனா கேஸ்கள் அதிகரித்தாலும் அங்கு நோயாளிகள் வேகமாக குணப்படுத்தப்படுகிறார்கள். அதேபோல் அங்கு பலி எண்ணிக்கையும் குறைவான அளவிலேயே உள்ளது. கேரளாவில் 18,004 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் 63,63,442 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,609 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. அங்கு தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக 66,123 பேர் உள்ளனர். அங்கு இதுவரை மொத்தமாக 61,59,676 பேர் குணமடைந்து உள்ளனர். அதோடு மகாராஷ்டிராவில் இதுவரை 1,34,201 பலியாகி உள்ளனர். இந்தியாவில் அதிக கொரோனா மரணங்கள் ஏற்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்றாக உள்ளது.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் தற்போது வரை 29,21,049 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மூன்றாம் அலை மிக மோசமாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு புதிதாக 1177 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆக்டிவ் நோயாளிகளாக 22,676 பேர் உள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கர்நாடகாவில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை கொஞ்சம் குறைவாகவே உள்ளது. 28,61,499 பேர் கர்நாடகாவில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1947 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 36,848 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும் இன்னும் மொத்தமாக பாதிப்பு குறையவில்லை. மாறாக கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்புகள் 100, 200 என்ற அளவில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 1800க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. 25,79,130 பேர் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தமிழ்நாட்டில் இப்போது 20,363 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 25,24,400 பேர் மொத்தமாக தமிழ்நாட்டில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 1930 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் நேற்று 27 பேர் கொரோனாவிற்கு பலியானார்கள். இதுவரை தமிழ்நாட்டில் 34,367 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 3.9 கோடி பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 19,85,182 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர பிரதேசத்தில் 1,461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆக்டிவ் நோயாளிகளாக 18,882 பேர் உள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் 19,52,736 பேர் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் இதுவரை மொத்தமாக 13,564 பேர் கொரோனா காரணமாக் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திர பிரதேசத்தில் 15 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர்.

Recommended Video

    School Reopen எப்போது? | Anbil Mahesh பதில் | Online Class | Oneindia Tamil
    மற்ற மாநிலங்கள்

    மற்ற மாநிலங்கள்

    உத்தர பிரதேசத்தில் 17,08,793 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மாநில அரசின் கணக்குப்படி வெறும் 570 ஆக்டிவ் நோயாளிகளே உள்ளனர். மேற்கு வங்கத்தில் 15,34,999 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். அங்கு தற்போது 10,215 ஆக்டிவ் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெல்லியில் 14,36,852 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 52 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 504 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+