அமைச்சர்கள்தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.. கேபினெட் கூட்டத்தில் "அழுத்தமாக" சொன்ன மோடி
டெல்லி: கொரோனா விஷயத்தில் பொதுமக்களுக்கு மத்திய அமைச்சர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது அமைச்சர்களிடம் மோடி இதை வலியுறுத்திக் கூறியுள்ளார் .
கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பதை அமைச்சர்களிடம் வலியுறுத்திய மோடி, தடுப்பூசி போடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற வேண்டும் என்று கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அடிக்கல் திட்டங்கள்
ஏற்கனவே அடிக்கல் நாட்டி கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு அப்போது பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்க உள்ளதால் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் உரிய புள்ளி விவரங்களை தயார் செய்துகொண்டு நாடாளுமன்றம் வரும்படி அமைச்சர்களுக்கு நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார் என்று பிடிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாவது அலையை தடுக்கலாம்
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றினால், அனைவரும் விழிப்புடன் இருந்தால் மூன்றாம் அலை ஏற்படாமல் தடுக்கலாம்.

தடுப்பூசிக்கு உத்வேகம்
தடுப்பூசி போட உரிய சூழலை உருவாக்க வேண்டும். இந்த காலக்கெடுவை மக்கள் பயன்படுத்திக் கொள்ள அமைச்சர்கள் ஊக்கம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

3 மணி நேர கூட்டம்
நேற்றைய கூட்டம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அப்போது நிதி ஆயோக் சுகாதாரத்துறை உறுப்பினர் விகே பால் இந்தியாவில் தற்போது கொரோனா நோய் பரவல் எப்படி இருக்கிறது, எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்கியுள்ளார்.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications