அசாமில் சில தொகுதிகளில் குறைந்த முஸ்லீம் வாக்குகள்.. ‘தொகுதி மறுவரையறை’யால் நடந்தது என்ன?
டெல்லி: அசாமில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின் கீழ், சில தொகுதிகளின் முகமே மொத்தமாக மாறிப்போனது. முஸ்லீம்கள் வெற்றி விகிதத்தை தீர்மானித்த தொகுதியில் தொகுதி மறுவரையறை மூலமாக பல மாற்றங்கள் நடந்துள்ளன. இது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் 14 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 10 தொகுதிகளுக்கு ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பார்பேடா, துப்ரி, கவுகாத்தி மற்றும் கோக்ரஜ்ஹார் ஆகிய தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அசாமில் இந்த முறை நடைபெற்று வரும் தேர்தலில் தொகுதி மறுவரையறை விஷயமே மிகுந்த கவனம் பெற்றுள்ளது. ஏனெனில், தொகுதி மறுவரையறை சில முக்கிய தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை மாற்றும் என்று சொல்லப்படுகிறது. அசாமில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அசாமில் வலுவாக கால் பதித்து வருகிறது.
அசாம் லோக்சபா தேர்தல்: தற்போதைய நிலவரப்படி அசாமில் உள்ள 14 தொகுதிகளில் பாஜக 10 இடங்களில் வென்றுள்ளது. பாஜக கூட்டணி கட்சிகளான அசோம் கனா பரிஷத் (AGP) மற்றும் ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்று தன்வசம் வைத்துள்ளன. இதையும் சேர்த்தால் தேசிய ஜனநாயக கூட்டணியின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து விடும்.
தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, பாஜக தலைமையிலான கூட்டணி 13 இடங்களில் வெற்றி பெறும் என்றும் துப்ரி தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் கூறினார். துப்ரி தொகுதியை பொறுத்தவரை முஸ்லீம் வாக்காளர்கள் 85 சதவிகிதத்திற்கும் மேல் இருப்பதால், ஹிமந்த பிஸ்வ சர்மா இவ்வாறு பேசியதாக தெரிகிறது.
தொகுதி மறுவரையறை: அசாமில் தொகுதி மறுவரையறை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்படது. 1976 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அப்போதுதான் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. இதன்படி, அஸ்ஸாம் மாநிலத்தில் 14 லோக்சபா தொகுதிகள், 126 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தனித் தொகுதிகள் மற்றும் எஸ்டி தொகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பட்டியல் இனத்தவருக்கு 1 லோக்சபா தொகுதி, 9 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
கவுரவ் கோகாய் குடும்பம்: பழங்குடி மக்களுக்கு 2 லோக்சபா தொகுதிகள், 19 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த தொகுதி மறுவரையறை மூலம் பல தொகுதிகளின் எல்லைகள் மாற்றம் செய்யப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்கது எந்த தொகுதி என்றால் கலியாபோர் லோக்சபா தொகுதி ஆகும். இந்த தொகுதியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியின் கவுரவ் கோகாய் குடும்பத்தினர் வெற்றி பெற்று வந்த தொகுதியாகும்.
கவுரவ் கடந்த இரண்டு முறை இந்த தொகுதியில் தான் நின்று வெற்றி பெற்றுள்ளார். தொகுதி மறுவரையறைக்கு பிறகு, கலியாபோர் லோக்சபா தொகுதிக்குள் வரும் சில சட்டமன்ற தொகுதிகள் நாகோன் தொகுதிக்கு மாற்றப்பட்டன. இப்படி மாற்றப்பட்ட தொகுதிகள் அனைத்துமே முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளாகும்.
ஜோர்ஹட் தொகுதி: நாகோன் லோக்சபா தொகுதியில் இருந்த சிறுபான்மை மக்கள் அதிகம் இல்லாத தொகுதிகள் கலியாபோர் லோக்சபா தொகுதிக்கு மாற்றப்பட்டது. இதனால் இரண்டு தொகுதிகளின் முகமே மாறிபோய்விட்டது. தொகுதி் மறுவரையக்கு பிறகு கலியாபோர் தொகுதி புதிய எல்லைகளுடன் கசிரங்கா தொகுதி என மாற்றப்பட்டது.
இதனால், கோகாய் இந்த முறை ஜோர்ஹட் தொகுதியில் களமிறங்கியுள்ளார். கோகாயை எதிர்த்து பாஜகவின் சிட்டிங் எம்பி தபன் கோகாய் களத்தில் இருக்கிறார். இந்த தொகுதியில் பாஜக தனது கட்சியின் உள்கட்டமைப்பை வலுவாக வைத்துள்ளது. பெரும்பாலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள் இந்த தொகுதியில் நிறைந்துள்ளனர்.
75% முஸ்லீம் வாக்குகள்: பிற மேஜர் மாற்றம் எதுவென்றால், மேற்கு அசாமில் உள்ள பார்பெட்டா தொகுதி ஆகும். பார்பெட்ட தொகுதி முஸ்லீம் பெரும்பான்மையாக உள்ள தொகுதியாக இருந்தது. இதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சி மற்றும் அசாமில் உள்ள ஏஐயுடிஎப் கூட்டணி ஆகியவற்றை சேர்ந்த முஸ்லீம் எம்பிக்கள் வசம் இருந்தது.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் அருகில் உள்ள துப்ரி தொகுதிக்கு மாற்றப்பட்டன. இந்த தொகுதியில் ஏற்கனவே 75 சதவிகிதத்திற்கும் மேல் முஸ்லீம் வாக்காளர்கள் உள்ளனர். அதே வேளையில் பார்பேடா தொகுதியில் முஸ்லீம் வாக்காளர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதமாக குறைந்தது. இதனால் பார்பேடா தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஏஜிபி கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளார்.
பாஜகவின் புது அணுகுமுறை: துப்ரி தொகுதியை பொறுத்தவரை ஏஐயூடிஎப் கட்சியின் பத்ருதின் அஜ்மலுக்கும், காங்கிரஸ் கட்சியின் ரகிபுல் ஹூசைனுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. நகோன், கரிம்கஞ்ச் மற்றும் டர்ராங் உடல்குரி தொகுதியில் கணிசமான அளவில் முஸ்லீம் வாக்குகள் உள்ளன. ஆனாலும் துப்ரி தொகுதி அளவுக்கு பெரிய எண்ணிக்கையில் இல்லை.
தர்ராங் - உடல்குரி லோக்சபா தொகுதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் வெற்றிக்கு இவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதிகளில் எல்லாம் பாஜக, அனவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கோஷத்துடன் முஸ்லீம் சமூகத்தினரிடம் வாக்குகளை கோரி வருகிறது. அசாமில் இது பாஜகவிற்கு இது புதிய அணுகுமுறையாகும்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!











Click it and Unblock the Notifications