டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேரடியாக சவால் விட்ட சரத் பவார்.. அமைதி காத்த அமித் ஷா.. இரண்டு வாரம் முன் நடந்த அந்த சம்பவம்!

Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு பின் சரத் பவார் விடுத்திருந்த சவாலுக்கு தற்போது பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா சரியான பதிலை கொடுத்து உள்ளார் என்று நெட்டிசன்கள் பேசிக்கொள்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் மெஜாரிட்டிக்கு 42 இடங்கள் குறைவாக இருந்தும் கூட அங்கு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. நேற்று அதிகாலை மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை.மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. . காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் வென்றது.

உடைய போகும் அடுத்த பர்னிச்சர்.. 17 சிவசேனா எம்எல்ஏக்களை குறிவைக்கும் பாஜக.. இப்படி ஒரு திட்டமா!? உடைய போகும் அடுத்த பர்னிச்சர்.. 17 சிவசேனா எம்எல்ஏக்களை குறிவைக்கும் பாஜக.. இப்படி ஒரு திட்டமா!?

என்ன பேட்டி

என்ன பேட்டி

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு பின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அளித்த பேட்டியில், பாஜகவிற்கு தனியாக ஆட்சி அமைக்கும் அளவிற்கு மகாராஷ்டிராவில் இடம் இல்லை. அதேபோல்தான் சிவசேனாவும். அவர்களுக்கு ஆட்சியை பிடிக்க போதுமான இடங்கள் கிடையாது. இரண்டு கட்சியும் மகாராஷ்டிராவில் 170 இடங்களை தனியாக பெற முடியாது.

என்ன அதிசயம்

என்ன அதிசயம்

ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே இவர்கள் தனிப்பெரும்பான்மை பெற முடியும். சிவசேனா என்ன செய்கிறது என்று பார்க்கலாம். நாங்கள் பாஜகவுடன் சேர மட்டோம் என்று முன்பே கூறிவிட்டோம். எங்களுக்கு அந்த விருப்பம் கிடையாது. அமித் ஷா பெரும்பான்மை இல்லாமலே பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்து இருக்கிறார்.

பார்க்கலாம்

பார்க்கலாம்

மகாராஷ்டிராவில் அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். அவர் திறமையானவர் என்று கூறுகிறார்கள். அவர் தனது திறமையை வைத்து மகாராஷ்டிராவில் எப்படி ஆட்சியை பிடிக்கிறார் என்பதை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன், என்று சரத் பவார் தெரிவித்து இருந்தார்.

சவால் விடுத்தார்

சவால் விடுத்தார்

ஆனால் அப்போது அமித் ஷா அமைதி காத்தார். ஆனால் தற்போது அவர் சவால் விடுத்தது போலவே அமித் ஷாவின் அதிரடியால் அங்கு பாஜக ஆட்சி அமைந்து இருக்கிறது. நேற்று மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். நேற்று அதிகாலை இந்த அதிரடி திருப்பம் நடந்தது. இது சரத் பவாரை மொத்தமாக உலுக்கி உள்ளது.

பெரும்பான்மை இல்லை

பெரும்பான்மை இல்லை

அமித் ஷா பெரும்பான்மை இல்லாமலே பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்து இருக்கிறார்,, மகாராஷ்டிராவில் அவர் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம் என்று சரத் பவார் சொன்னதற்கு தற்போது மிக சரியான பதிலடியை அமித் ஷா கொடுத்துள்ளார். தன்னை சிறந்த ராஜ தந்திரி என்று அமித் ஷா நிரூபித்துள்ளார் என்கிறார்கள்.

English summary
Maharshtra: Sharad Pawar's challenges to Amit Shah was the reason for everything that's happening in the state now .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X