• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இந்தியாவுக்கு பேராபத்து.." மத்திய அரசு ஆர்எஸ்ஸிடம் முழுமையாக சரணடைந்துவிட்டது! காங். தலைவர் கார்கே

Google Oneindia Tamil News

டெல்லி: அரசியலமைப்பு நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஆளும் பாஜகவைச் சாடி மிக கடுமையான கருத்துகளை முன்வைத்துள்ளார்.

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவ. 26ஆம் தேதி தேசிய அரசியலமைப்பு நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியலமைப்பு ஒரு அடிப்படை நெருக்கடியை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

மோடி சர்கார்..அரசு நிறுவனங்கள் “ஜீரோ” -வேலை “நோ”! இன்னுமா இந்தியா ஜொலிக்குது? காங். தலைவர் கார்கே மோடி சர்கார்..அரசு நிறுவனங்கள் “ஜீரோ” -வேலை “நோ”! இன்னுமா இந்தியா ஜொலிக்குது? காங். தலைவர் கார்கே

 மல்லிகார்ஜுன் கார்கே

மல்லிகார்ஜுன் கார்கே

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்தியாவை மீட்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் நாளாக இருக்க வேண்டிய அரசியலமைப்பு நாளில், ஆளும் கட்சி மற்றும் அதன் சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட சட்டவிரோத சட்டத்தை நாட்டில் திணிக்க முயல்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கார்கே 'இந்திய அரசியலமைப்பின் நெருக்கடி' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 நெருக்கடி

நெருக்கடி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆர்எஸ்எஸ் அமைப்பும் சரி பாஜகவும் சரி இரண்டும் ஒன்று தான்.. மத்திய அரசும் சரி அதன் அமைப்புகளும் சரி முழுமையாக ஆர்எஸ்எஸ் கட்டளைகளுக்கு தங்களை முழுமையாக ஒப்படைத்துவிட்டது.. கடந்த 70 ஆண்டுகளாக வெற்றிகரமாக இருந்த இந்த அரசியலமைப்பு, இன்றைய காலகட்டத்தில் அடிப்படை நெருக்கடியை எதிர்கொள்கிறது.. அரசியலமைப்பின் ஆத்மாவே இப்போது நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

 ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

சமூக சேவை என்ற போர்வையில் வெறுப்புப் பிரசாரங்களை மேற்கொள்ளும் அமைப்பு தான் ஆர்எஸ்எஸ். இந்த அமைப்பின் கட்டளைகளுக்கு அரசு தன்னையும் தனது அமைப்புகளையும் முழுமையாகக் கொடுத்துவிட்டது. உண்மையில், இனி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டும் வெவ்வேறு அமைப்புகள் எனக் கருதுவதே தவறான ஒன்றாகும். பாஜக கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே ஆர்எஸ்எஸ் தனது சித்தாந்தத்தை வேகமாகப் பரப்பி வருகிறது.

 ஒற்றுமையின்மை

ஒற்றுமையின்மை

மக்கள் மத்தியில் மட்டுமல்ல, அரசுகள் மற்றும் மாநிலங்களுக்கிடையில் கூட ஒற்றுமையின்மை வளர்ந்து வரும் ஒரு மோசமான நிலையை நாம் அடைந்துள்ளோம். இனியும் நமது நாட்டை கூட்டாட்சி நாடு என்று நம்மால் சொல்ல முடியாது. பாஜகவின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் நாடாளுமன்றத்தில் மைக் அணைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஊடகங்களின் சுதந்திரமும் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது.

 வெறுப்புவாத அரசியல்

வெறுப்புவாத அரசியல்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சுதந்திரங்களைக் குறைக்க பாஜகவை ஆர்எஸ்எஸ் பயன்படுத்தியுள்ளது. சட்டவிரோதமானது சட்டப்பூர்வமாக மாறியுள்ளது.. ஏனெனில் ஆங்காங்கே நடந்த வெறுப்புவாத அரசியல் இப்போது மையத்திற்கு வந்துவிட்டது. மோடி தலைமையிலான அரசு எதிர்க் கருத்துகளை அனுமதிப்பதில்லை. எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க மத்திய அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது

 வரலாற்றுப் புத்தகங்கள்

வரலாற்றுப் புத்தகங்கள்

நாட்டில் இப்போது பல்வேறு பிரச்சினைகள் நிலவுகிறது. நீதிபதிகள் திடீரென மர்மமான முறையில் உயிரிழக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஆயுதப் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகமாகிறது. இதையெல்லாம் தடுக்க பாஜக தவறிவிட்டது. பாஜகவின் வெறுக்கத்தக்கத் திட்டத்திற்கு ஏற்றவாறும், அதை உண்மை என்று நிலைநிறுத்தும் வகையிலும் வரலாற்றுப் புத்தகங்கள் மீண்டும் எழுதப்படுகின்றன" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Congress president Mallikarjun Kharge said the constitution is facing a fundamental crisis: Congress president Mallikarjun Kharge slams BJP govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X