டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் சொல்வதும் சரிதான்.. மனம் மாறிய மமதா பானர்ஜி.. திமுகவின் ஐடியாவிற்கு கிரீன் சிக்னல்!

திமுக தலைவர் ஸ்டாலினின் திட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: திமுக தலைவர் ஸ்டாலினின் திட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

யார் பிரதமர் வேட்பாளர்.. இதுதான் எதிர்க்கட்சிகள் மத்தியில் தற்போது இருக்கும் மிக முக்கியமான கேள்வி. லோக்சபா தேர்தலில் எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் யாரை பிரதமராக தேர்வு செய்வது என்று பெரிய பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது.

இதற்காக எதிர்க்கட்சிகள் வரும் மே 21ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் 21 கட்சிகள் கலந்து கொள்ளும் என்று கூறுகிறார்கள்.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் 15 நாளுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாது.. சரத் பவார் ஆருடம் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் 15 நாளுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாது.. சரத் பவார் ஆருடம்

சிக்கல் 1

சிக்கல் 1

இந்த பிரதமரை தேர்வு செய்யும் கூட்டத்தில் இரண்டு சிக்கல்கள் இருக்கிறது. முதல் சிக்கல், இந்த பிரதமர் பதவிக்கு இரண்டு முக்கிய தலைவர்கள் போட்டி போடுகிறார்கள். ஒருவர் மாயாவதி இன்னொருவர் மமதா பானர்ஜி. இந்த இரண்டு தலைவர்களில் யாரை தேர்வு செய்வது என்று தெரியாமல் கட்சிகள் குழம்பி வருகிறது. இருவருமே 20+ இடங்களில் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

சிக்கல் 2

சிக்கல் 2

இதில் இருக்கும் இன்னொரு சிக்கல் என்னவென்றால், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். இவர் தென்னிந்திய தலைவர் ஒருவரை மீண்டும் நாட்டின் பிரதமராக்க வேண்டும் என்று கூறி வருகிறார். மஜத தேசிய தலைவர் தேவ கவுடாவை மனதில் வைத்து இவர் இந்த செயலில் இறங்கி இருக்கிறார். இதனால் இந்த குழப்பமும் நீடித்து வருகிறது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இந்த நிலையில்தான் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று வெளிப்படையாக அறிவித்து உள்ளார். சந்திரசேகர ராவ் உடன் நடந்த ஆலோசனையில் கூட ஸ்டாலின் இதை நேரடியாக சொல்லி இருக்கிறார். அனைத்து மாநில கட்சிகளையும் இணைக்கும் புள்ளியாக ராகுலை, ஸ்டாலின் பார்க்கிறார்.

இதுதான் சரி

இதுதான் சரி

தற்போது ஸ்டாலினின் இந்த திட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் இறங்கி வந்து இருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஸ்டாலின் சொல்வது சரிதான்.. நிறைய மாநில தலைவர்கள் பிரதமராக ஆசைப்படுகிறார்கள். இதனால் ராகுலையே பிரதமராக்கி விடலாம். அப்படி செய்தால் கூட்டணியில் பிரச்சனை இருக்காது. மாநில தலைவர்களுக்கு இடையே மனஸ்தாபம் இருக்காது என்று மமதா நினைப்பதாக தெரிவிக்கிறார்கள்.

என்ன ஈகோ

என்ன ஈகோ

அதுபோல் மமதா பானர்ஜிக்கும் மாயாவதிக்கும் இடையில் தற்போது பெரிய அளவில் ஈகோ நிலவி வருகிறது. பிரதமர் பதவிக்காக இருவருக்கும் இடையில் ஒரு பனிப்போர் நிலவி வருகிறது. இதில் இருவருக்கும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க ராகுல்தான் சரியான சாய்ஸ் என்று முடிவெடுத்து உள்ளனர்.

திமுகவின் திட்டம்

திமுகவின் திட்டம்

அதேபோல் எதிர்க்கட்சிகளின் இப்போதைய ஒரே குறிக்கோள் பிரதமர் மோடியை வீட்டிற்கு அனுப்புவதுதான். அதற்கு எந்த தியாகத்தை வேண்டுமானாலும் இரண்டு தலைவர்களும் செய்ய தயாராக இருக்கிறார்கள். இதனால் திமுகவின் திட்டத்திற்கு மாநில கட்சிகள் மனம் இறங்கி வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
WB CM Mamata nods for Stalin's idea: May choose Rahul for the ultimate post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X