இந்திய வரைபடத்தை தவறாக குறிப்பிட்ட WHO.. உயர்மட்ட அளவில் பிரச்சினையை எடுத்துச் சென்ற இந்தியா
டெல்லி: உலக சுகாதார அமைப்பின் தளத்தில் இந்திய வரைபடத்தைத் தவறாகக் குறிப்பிட்டது தொடர்பாக உலக சுகாதார அமைப்பிடம் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் குறித்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு நாட்டிலும் தற்போது வைரஸ் பாதிப்பு எப்படி உள்ளது என்பதை விளக்கி உலக சுகாதார அமைப்பு தகவல்களை வெளியிட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு தொடர்பான மேப் வடிவில் உலக சுகாதார அமைப்பு தனது இணையதளத்தில் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. அப்படி வெளியிட்டுள்ள வரைபடம் தான் சர்ச்சையில் சிக்கியது.

உலக சுகதார அமைப்பு
அதாவது இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீர் பகுதியை ஒரே நிறத்தில் குறிப்பிடுவதற்குப் பதிலாக வெவ்வேறு நிறங்களில் குறிப்பிட்டிருந்தது. அதாவது பாகிஸ்தான் மற்றும் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் வித்தியமான நிறத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாந்தனு சென் கடந்த ஜன. 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்

கேள்வி
இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதாவது உலக சுகாதார அமைப்பு தனது இணையதளத்தில் இந்தியாவுக்குச் சொந்தமான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை வித்தியமான நிறத்தில் குறிப்பிட்டது தொடர்பாக இந்திய அரசு எதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா என்று ஜோதிராதித்ய சிந்தியா கேள்வி எழுப்பினார்.

கடும் அதிருப்தி
அதற்கு உள் துறை இணை அமைச்சர் முரளீதரன் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார். அதில் முரளீதரன், "உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் இந்தியாவின் வரைபடத்தைத் தவறாகச் சித்தரிப்பது தொடர்பான பிரச்சினை குறித்து உலக சுகாதார அமைப்பின் உயர்மட்டத்தில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தங்கள் தளத்தில் உள்ள நாடுகளின் எல்லைகள் சட்டப்பூர்வமானது இல்லை.

நடவடிக்கை
அவை தோராயமான எல்லைக் கோடுகளைக் குறிக்கின்றன என்று விளக்கத்தை தங்கள் தளத்தில் சேர்த்துக் கொள்வதாக ஜெனீவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகத்திற்கு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது இருப்பினும் எல்லைகளைச் சரியான முறையில் சித்தரிப்பது குறித்த இந்திய அரசின் நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது" என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தனது எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications