டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த அலைக்கு புதிய வேரியண்ட் தேவையில்லை.. இருப்பதே போதும்! மறைந்துள்ள ஆபத்தை கூறும் ஆய்வாளர்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பரவல் நாட்டில் மெல்ல மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், அடுத்த கொரோனா அலை எப்போது ஏற்படும் என்பது குறித்து ஆய்வாளர்கள் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் - கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஒட்டுமொத்த உலகைப் புரட்டிப் போட்டது இந்த ஒற்றை வார்த்தை தான். வளர்ந்த நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை கொரோனாவால் அனைத்தும் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

வெயில் சுட்டெரித்தாலும் 5 நாட்களுக்கு ஜில் மழை இருக்காம் - வானிலை மையத்தின் கூல் அறிவிப்பு வெயில் சுட்டெரித்தாலும் 5 நாட்களுக்கு ஜில் மழை இருக்காம் - வானிலை மையத்தின் கூல் அறிவிப்பு

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், அதனால் ஏற்பட்ட மோசமான பொருளாதார பாதிப்புகள் மறுபுறம் இருந்தது. இதில் இருந்து உலக நாடுகள் இப்போது தான் மெல்ல மீண்டு வருகிறது.

 ஓமிக்ரான் அலை

ஓமிக்ரான் அலை

ஓமிக்ரான் கொரோனா அலைக்குப் பின்னர், உலகின் பெரும்பாலான நாடுகளில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்ததே வந்தது. இந்தச் சூழலில், சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது அடுத்த கொரோனா அலையின் தொடக்கமா இருக்குமோ என்று பலரும் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாகத் தென் ஆப்பிரிக்க ஆய்வாளர் துலியோ டி ஒலிவேரா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

 ஓமிக்ரான் உட்பிரிவு

ஓமிக்ரான் உட்பிரிவு

மற்றொரு கொரோனா அலையை ஏற்படுத்த புதிய வகை கொரோனா வைரஸ் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ள தென்னாப்பிரிக்க ஆய்வாளர்கள், தற்போது பரவும் BA.4 மற்றும் BA.5 ஆகிய உருமாறிய கொரோனா வகைகளே கூட அடுத்த அலை ஏற்படக் காரணமாக அமைய வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர். BA.4 மற்றும் BA.5 என்பது 3ஆவது கொரோனா அலை ஏற்படக் காரணமாக அமைந்த உருமாறிய ஓமிக்ரான் கொரோனாவின் உட்பிரிவாகும்.

 முந்தைய அலைகள்

முந்தைய அலைகள்

துலியோ டி ஒலிவேரா மேலும் கூறுகையில், "கொரோனா வைரஸ் உருமாறும் முறையில் மாற்றம் தெரிகிறது. அடுத்த கொரோனா அலையை ஏற்படுத்த புதிய வகை கொரோனா தேவையில்லை. அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் BA.4 மற்றும் BA.5 உடன் சேர்ந்து BA.2.12 உருமாறிய கொரோனா வகைகளின் பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. முந்தைய அலைகளின் மூலம் கிடைத்த நோய் எதிர்ப்புச் சக்திகள் கொரோனா பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க போதுமானதாக இருக்காது.

 டய்ர்ட் ஆகிவிட்டோம்

டய்ர்ட் ஆகிவிட்டோம்

ஓமிக்ரான் BA.1 தொற்றில் இருந்து குணமடைந்தோர் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி BA.4 மற்றும் BA.5 வகை கொரோனாவில் இருந்து நம்மைக் காப்பாற்றாது. அதேநேரம் புதிய ஆய்வுகளை வைத்துப் பார்க்கும் போது, BA.4 & BA.5 வகை ஓமிக்ரான் கொரோனாவால் தென் ஆப்பிரிக்காவில் அடுத்த அலை ஏற்படும், நாம் அனைவரும் இந்த வைரசால் டயர்ட் ஆகிய விட்டோம். ஆனால், அந்த வரைஸ் நம்மைக் கண்டு டயர்ட் ஆகவில்லை.

 குறையும் நோய் எதிர்ப்புச் சக்தி

குறையும் நோய் எதிர்ப்புச் சக்தி

முந்தைய தொற்றுகளிலிருந்து கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வருவதை நாம் இப்போது தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பராமரிக்கத் தடுப்பூசி மிகவும் நம்பகமானது. உலகில் மூன்றாவது அலையைத் தூண்டிய ஓமிக்ரான் மாறுபாட்டின் தோற்றத்தின் பின்னணியில் உள்ள முக்கிய கோட்பாடுகள் உள்ளன. ஒமிக்ரான் தோன்றுவதற்கு 3 முக்கிய கோட்பாடுகள் உள்ளன: A) மாதிரியற்ற இடம், B) நீட்டித்த நோய்த்தொற்றுகள் & C) விலங்குகள். இதில் BA.4 மற்றும் BA.5 வகை கொரோனா ஒரே ஹோஸ்டில் நீடித்த வைரஸ் இருப்பதால் ஏற்பட்டவை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

 அதிகரிக்கும் கொரோனா

அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக, டெல்லி உள்ளிட்ட வடக்கு மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

English summary
A new variant may not be needed for another Covid wave: (ஓமிக்ரான் கொரோனா இந்தியாவில் அடுத்த கொரோனா அலையை ஏற்படுத்துமா) BA.4 and BA.5 now detected in South Africa could lead to the next surge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X